Categories
தேசிய செய்திகள்

பிஎஃப்ஐ அமைப்பு போராட்டத்தில் சேதம்….. அபதாரம் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கேரளா, தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆள் சேர்த்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து பிஎஃப் அமைப்பினர் வீடு, அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது 350 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பிஎப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதற்கிடையில் பிஎஃப்ஐ அமைப்புக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இதற்காக 1000 மையில் கூட நடந்திடுவேன்”…. ராகுல் காந்தி நெகிழ்ச்சி டுவிட் பதிவு….!!!!

இந்திய ஒற்றுமை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது கேரளாவில் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கேரள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்தனர். அதன் பிறகு பேசிய ராகுல் காந்தி, நீங்கள் எழுப்பிய இந்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்று உறுதி அளிக்கிறேன். அதனை தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை பெறும் முதலாளிக்கு மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

இது என் வீடு!…. இந்த மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி…. ராகுல்காந்தி நெகிழ்ச்சி….!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. “பாரத் ஜோடோ யாத்ரா” எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரி -காஷ்மீர் வரை 3,570 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் பாதயாத்திரையை மேற்கொள்கிறார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியே தனது பாதயாத்திரையை அவர் காஷ்மீரில் நிறைவுசெய்ய இருக்கிறார். இதற்குரிய தொடக்கவிழா சென்ற 7-ஆம் தேதி குமரியில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி ராகுல் காந்தியின் பாதயாத்திரையை துவங்கிவைத்தார். இந்நிலையில் கேரளாவில் […]

Categories
தேசிய செய்திகள்

“தெரு நாய்களை கொல்ல அனுமதி வேண்டும்”….. கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அதிரடி மனு….!!!!!

கேரளாவில் சமீப காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அதாவது ரோட்டில் நடந்தும், வாகனங்களிலும் செல்லும் சிறுவர்கள், வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரும் நாய்களின் தாக்குதலுக்கு இரையாகி வருகிறார்கள். இந்த வருடம் 9 மாதத்தில் மட்டும் நாய்களின் தாக்குதலுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெறிபிடித்த தெருநாய்களை கொல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலுத்து வருகிறது. கேரளாவில் பல பஞ்சாயத்துக்கள் தெருநாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டுமென்று கேரள […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு…. வாலிபருக்கு 50 ஆண்டு சிறை….. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

கேரள மாநிலம் திருச்சூர் குன்னம்குளம் போர்குளத்தில் சாய்ஜுன்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சா பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சாயுஜினை கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை குன்னம்குளம் அதிவிரைவு சிறப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பட்டப்பகலில், பொதுவெளியில்…. நடிகைக்கு பாலியல் தொல்லை…. ஷாக் நியூஸ்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதற்கு அரசு சார்பாக தகுந்த தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. இன்னும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இது சாதாரண மக்களுக்கு மட்டுமல்லாமல் நடிகைகளும் இதில் விதி விலக்கல்ல. அந்த வகையில் தற்போது கேரளாவின் கோழிக்கோடில் உள்ள ஷாப்பிங் மாலில் பாலியல் தொல்லை நடைபெற்றதாக பிரபல மலையாள நடிகை புகார் தெரிவித்துள்ளார். படத்தின் ப்ரோமோஷனுக்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsSA : கெத்தாக நிற்கும் கோலி, ரோஹித்….. “பிரம்மாண்ட கட் அவுட் வைத்து”….. மகிழ்ந்த ரசிகர்கள்..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஐ முன்னிட்டு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் ரசிகர்கள்  திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியம் முன் பெரும் ஃப்ளெக்ஸ் வைத்துள்ளனர் தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20ஐ மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.. இந்த தொடருக்காக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அனைவரும் புறப்பட்டு கடந்த 25ஆம் தேதி  கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தனர்..  பின் அவர்களுக்கு அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“பம்பர் லாட்டரியில் 25 கோடி பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுனர்” நிம்மதியும், மகிழ்ச்சியும் பறிபோய் விட்டதாக வேதனை‌….!!!!

கேரள மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுநரான அனூப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏராளமான கடன் இருந்ததால் சமையல் வேலைக்கு மலேசியாவுக்கு செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார். அதோடு வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் தொகைக்காகவும் விண்ணப்பித்திருந்தார். இந்த கடன் தொகையை வழங்குவதற்கு வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்த நிலையில், ஓணம் பம்பர் லாட்டரியில் அவருக்கு ரூபாய் 25 கோடி பரிசு விழுந்தது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அனூப் தன்னுடைய மனைவியுடன் லாட்டரி ஏஜென்சி இருக்கும் இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிஎப்ஐ முழு அடைப்பு போராட்டம்…. பஸ், கார் கண்ணாடி உடைப்பு…. கேரளாவில் பதற்றம்….!!!

நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்க துறை நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் ஆயுதங்கள், […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கல்வீச்சு, குண்டுவீச்சு…. கேஎஸ்ஆர்டிசி டிரைவர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!!

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா கேரள மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்திய நிலையில், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. பல்வேறு இடங்களில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. கோழிக்கோடு, வயநாடு, திருவனந்தபுரம், ஆலப்புழா, பந்தளம், கொல்லம், திருச்சூர், கண்ணூர் போன்ற இடங்களில் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. கோழிக்கோடு மாவட்டத்தில் 3 இடங்களில் கல்வீச்சு நடைபெற்றது. 2 இடங்களில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டது. பெங்களூரு நோக்கிச் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு, கேரளாவில் நடைபெற்று வரும் என்ஐஏ சோதனை….. 100 பேர் அதிரடி கைது….!!!! 

தமிழ்நாடு, கேரளா உள்பட நாடு முழுவதும் இதுவரை இல்லாத வகையில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பி.எப்.ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ ) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழ்நாடில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அய்யோ இப்படி ஒரு அவலமா?…. 8 வயது சிறுவன் மது குடிக்கும் வீடியோ…. சித்தப்பா கைது….!!!!

கேரளாவில் எட்டு வயது சிறுவன் பீர் குடிப்பது போன்ற வீடியோ வைரலானது. இந்நிலையில் இது தொடர்பாக சிறுவனின் சித்தப்பா மனு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூலம் பண்டிகையை கொண்டாட சிறுவனுடன் வெளியே சென்று அவர் மது கடையில் பீர் வாங்கி கொடுத்துள்ளார். அதன் பிறகு அதை குடிக்கும்படி சிறுவனை வற்புறுத்தியுள்ளார்.இதனை மனு வீடியோவாக பதிவு செய்து கொண்டார். இதன்பின்பு அந்த வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்து உள்ளார். இதனை சிறுவனின் பெற்றோர் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். இதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

8 வயது சிறுவனை….. பீர் குடிக்க வைத்து இப்படியா செய்வது?…. இளைஞர் செய்த கொடூர சம்பவம்….!!!!

கேரளாவில் அண்ணன் மகனான எட்டு வயது சிறுவனை பீர் குடிக்க கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் நெய்யாட்டிங்கரை பகுதியில் வசித்து வருபவர் மனு. இவரது அண்ணன் மகனான 8 வயது சிறுவனை அழைத்து கொண்டு ஓணம் பண்டிகை கொண்டாட அவர் வெளியே சென்றுள்ளார். பின்னர் மது கடை ஒன்றிற்கு சென்று பீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் சிறுவனிடம் பீரை கொடுத்து குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். சிறுவனும் வேறு […]

Categories
தேசிய செய்திகள்

“வேலையை இழந்த தந்தை” வங்கியின் திடீர் நடவடிக்கை…. மாணவியின் விபரீத முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் அஜி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூபாய் 11 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அஜிகுமார் தன்னுடைய வேலையை இழந்ததால் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம் 1.5 லட்சம் பணத்தை வங்கியில் அஜிகுமார் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கி நிர்வாகம் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தற்கொலை…. நடந்தது என்ன?….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கேரளா மாநிலம் பாலக்காடு கண்ணூர் அருகில் உள்ள கறிவெள்ளூர் பகுதியில் ராகேஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சூர்யா(24). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது மேலும் ராகேஷ் தன்னுடைய மனைவி சூர்யாவை வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ராகேஷின் தாய் சந்திராவும் உடந்தையாக இருந்து வந்துள்ளார். இது குறித்து அவ்வப்போது தனது […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!….. பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி வென்ற ஆட்டோ டிரைவர்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

கேரளா மாநிலத்தில் லாட்டரி துறை சார்பில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி 2022 லாட்டரி முடிவுகள் நேற்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதில் ஓணம் பம்பர் 2022 அல்லது திருவோணம் பம்பர் முடிவுகள் கேரள மாநில லாட்டரி துறையில் வெளியானது. அதில் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டது.. இந்த ஆண்டு குழுக்களில் தேர்வானவர்களுக்கு ரூ.25 கோடி முதல் ரூ.1000 வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

“நாய்களைக் கொன்று குவிப்பதால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது”… முதல் மந்திரி பினராயி விஜயன் பேச்சு…!!!!!

நாய்கள் தொல்லை தொடர்பாக கேரளா முதல் மந்திரி பினராய விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கேரளாவில் நாய்களை கொன்று  குவிப்பதனால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. அதே சமயம் நாய்களை விஷம் வைத்தும் அடித்தும் கொன்று குவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் நாய்கள் கூட்டமாக சுற்றி  திரிவதும் கூடுவதும் அவைகளின் குற்றமல்ல. தெரு ஓரங்களில் கண்ட கண்ட இடங்களில் பொதுமக்கள் வீசியயெறியும் மாமிசம் உட்பட கழிவுகளை உன்னத்தான் அவைகள் கூடுகின்றது. அதேசமயம் அந்த வழியாக செல்பவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

“யானை தந்தத்தில் செய்யப்பட்ட சிலை” மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர்…. வசமாக சிக்கிய 3 பேர்….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள தொடுபுழா பகுதியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 2 சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிலையை விற்பனை செய்ய முயற்சிக்கும் கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கிருஷ்ணன், சூர்யா கோஸ், ஜோன்ஸ் ஆகியோர் சிலைகளை விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் சிலைகளை வாங்கும் நபர்கள் போன்று 3 பேரிடமும் நடித்தனர். இதை […]

Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் ஸ்டேஷனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பாம்புகள்”….. அலறும் குரங்குகள்….!!!!

குரங்கு தொல்லையை தடுக்கும் வகையில் போலீஸ் நிலையத்தில் சீன ரப்பர் பாம்புகள் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள சம்பவம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள கம்பம்மெட்டு காவல் நிலைய பகுதிகளில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குரங்கு தொல்லையை தடுக்க ரப்பர் பாம்புகளை பயன்படுத்தும் சீனர்கள் சோதனை வெற்றி பெற்றதால் கம்பம்மெட்டு போலீசாரும் அதே வழியை பின்பற்றி ரப்பர் பாம்புகளை மரக்கிளைகளில் வைத்து நிம்மதி அடைந்துள்ளனர். அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகளுக்கு பாதுகாப்பு….. துப்பாக்கியுடன் சென்ற நபர்…… எதுக்காக என்பதுதான் ஹைலைட்…..!!!

தெருநாய்களிடம் இருந்து மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நபர் ஒருவர் துப்பாக்கியை ஏந்தியபடி, மாணவிகளை மதரஸாவிற்கு அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. காசர்கோடு பேக்கலில் உள்ள ஹதாத் நகரில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மதரஸா பள்ளியில் படிக்கும் சிறுமியின் தந்தையான சமீர், சில நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை தெருநாய் கடித்ததை அடுத்து இவ்வாறு பாதுகாப்பு வழங்க முடிவு செய்தார். வெள்ளிக்கிழமை, அவர் […]

Categories
உலக செய்திகள்

OMG: “பள்ளி பேருந்துக்குள் தவறுதலாக பூட்டப்பட்ட சிறுமி பலி”… பெரும் சோகம்…!!!!!

கத்தாரில் பள்ளி பேருந்துக்குள் தவறுதலாக பூட்டப்பட்ட சிறுமி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செங்கன சேரி சேர்ந்த அபிலாஷ் சாக்கோ சௌமியா தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் மேற்காசிய நாடான கத்தாரில் வேலை செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நான்கு வயதில் மின்ஸா மரியம் ஜேக்கப் எனும் மகள் இருக்கின்றார். கத்தாரின் அல் வாக்ராவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படித்து வந்த இவர் செப்டம்பர் 11ஆம் தேதி காலை பேருந்தில் […]

Categories
தேசிய செய்திகள்

டயர் வெடித்ததால்…. 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. ஒருவர் பலி 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்….!!!!

கேரள மாநிலம் இடுக்கி அருகே அரசு பேருந்து டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மூணாறில் இருந்து 60 பயணிகளுடன் எர்ணாகுளத்திற்குச் சென்ற பேருந்து சாக்கோச்சன் வாலி எனும் இடத்தில் உள்ள வளைவில் வேகமாக திரும்பியது. அப்போது மிகப் பெரிய கல்லில் பேருந்து மோதியதால் அதில் நேரிட்ட அழுத்தத்தில் முன்பக்க டயர் ஒன்று வெடித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. சுமார் 50 அடி […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! ஓணம் பண்டிகை ஸ்பெஷல் போல…. ஒரே வாரத்தில் மதுபான கடையில் கோடியில் விற்பனை….. எவ்வளவு வசூல் தெரியுமா…..?

ஓணம் பண்டிகை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஓணம் பண்டிகை கொண்டாடப் படவில்லை. இந்த வருடம் கொரோனா தொற்று குறைந்ததால் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை மக்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். இந்த பண்டிகையை ஒட்டி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 624 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்லத்தில் மட்டும் 1 கோடியே […]

Categories
தேசிய செய்திகள்

ஓணம் ஸ்பெஷல்….! “டாஸ்மாக்-க்கு டஃப் கொடுக்கும் கேரள மதுபானக்கழகம்”….. ஒரே நாளில் இவ்வளவு கோடியா?….!!!

ஓணம் பண்டியையை முன்னிட்டு, கேரளாவில் ரூ.117 கோடிக்கு மது விற்பனை செய்து அம்மாநில மதுபானக்கழகம் வருமானம் ஈட்டியுள்ளது. கேரளாவில் ஓணப்பண்டிகைக்கு முந்தைய நாளில் வரலாறு காணாத வகையில் மது விற்பனை நடந்துள்ளது. நேற்று கேரளா முழுவதும் ஓணம் பண்டிகையையொட்டி, அரசு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் 117 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. மாநில அளவில், கொல்லம் ஆசிரமம் விற்பனை நிலையத்தில் அதிக அளவில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொல்லம் ஆசிரம […]

Categories
தேசிய செய்திகள்

களைகட்டிய ஓணம் பண்டிகை…. இவ்வளவு கோடிக்கு மது விற்பனையா?….. மாநில அரசு அறிவிப்பு….!!!

கேரளாவில் மிக முக்கிய பண்டிகையான ஓணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே மது வகைகளை மது பிரியர்கள் வாங்கி குவிக்க தொடங்கினார்கள். இந்நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதியிலிருந்து 4 ஆம் தேதி வரை ரூ.324 கோடி மது விற்கப்பட்டுள்ளதாக கேரளா மாநில மதுபானம் கழகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு ரூ.248 கோடி விற்கப்பட்ட நிலையில் இருந்தாலும் 30% கூடுதலாக விற்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

விளக்கேற்ற வந்த மனைவியை…. விளக்கால் அடித்து கொன்ற கொடூரன்…. பின்னணி என்ன?…. பரபரப்பு….!!!!

கேரளா ஆலப்புழா கிடங்கம்பரம்பு பகுதியில் வசித்து வந்தவர் நிகிதா(25). இவருக்கும் வர்க்கலாவைச் சேர்ந்த அனீஷ் (35) என்பவருக்கும் சென்ற ஜூலைமாதம் திருமணம் நடந்தது. இதில் நிகிதா ஏற்கனவே திருமணமாகி சிறிது நாட்களிலேயே கணவனை பிரிந்து முறைப்படி விவாகரத்து பெற்றவர் ஆவார். இதற்கிடையில் அனீஷுக்கு சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் தம்பதியினர் திருமணம் முடிந்த உடனே வெளிநாடு சென்று வீடு திரும்பினர். அப்போது அங்கு வைத்து கணவன்-மனைவி இடையே சரியான புரிதல் இல்லாமல் சண்டை ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…..! திருமணம் நடந்த இரண்டே மாதத்தில் பயங்கரம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

திருமணமான இரண்டே மாதத்தில் மனைவின் மீது சந்தேகப்பட்டு கணவன் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே வர்க்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஸ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆலப்புழா பகுதியை சேர்ந்த நிகிதா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் இருவருக்குள் முற்றி போக ஆத்திரமடைந்த அனீஸ் அருகில் இருந்த விளக்கை எடுத்து தனது மனைவியை […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

HEAVY ALERT : 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….. வானிலை எச்சரிக்கை….!!!!

கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பருவ மழையால் பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. அதிலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பல நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இன்று கேரளாவில் நான்கு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா

பிரபல நடிகை கடத்தல் வழக்கு….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து 7 பேரை கைது செய்தனர். இந்த கடத்தலில் மலையாளம் முன்னணி நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திலீப் ஜாமினில் வெளிவந்த நிலையில் விசாரணை அதிகாரி கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக […]

Categories
பல்சுவை

கல்யாணத்தில் கலவரம் செய்த விருந்தினர்கள்…. போர்க்களமாகிய மண்டபம்…. வைரல்….!!!

சமூக வலைதளங்களில் பலவித வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இவற்றை நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து சிரிக்கின்றனர். அதன்படி சமீபகாலமாக திருமண வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகிறது. அதிலும் புதுமண தம்பதிகளின் வீடியோக்கள் எப்போது மிக விரைவாக வைரல் ஆகி வருகிறது. புதுமண தம்பதிகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பொதுவாக கல்யாண வீட்டில் எந்த அளவுக்கு மகிழ்ச்சி உற்சாகமாக இருக்கிறது, அதே அளவு ஒருவித பயமும், பதட்டமும் […]

Categories
தேசிய செய்திகள்

ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு… ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு… ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்…!!!!!

கேரளாவில் வருகிற எட்டாம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்றது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகின்றது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கின்றார். பத்தாம் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறுகின்றது. இந்த நிலையில் மாத பூஜை காலங்களைப் போலவே நெய்யபிஷேகம், கலச பூஜை, கலவ பூஜை, சகஸ்ர கலச பூஜை, படி […]

Categories
தேசிய செய்திகள்

“அப்பளம் எங்கடா”….. அக்கப்போரு….! கல்யாண பந்தியில் கலவரம்….. செம வைரலாகும் Video….!!!!

திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் தனது வாழ்வில் நடக்கும் மிக முக்கிய நிகழ்வு. தற்போது பல திருமணங்களில் வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. அவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் பல சண்டை காட்சிகளும் வெளியாகின்றது. அந்த வகையில் தற்போது கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள ஹரிப்பாடு அருகே முட்டம் பகுதியில் உள்ள மண்டபத்தில் சாப்பாடினால் திருமணம் மண்டபமே சூறையாடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. They call it the Great Kerala Pappad […]

Categories
டெக்னாலஜி

இவர்களுக்கு எலக்டிரிக் ஸ்கூட்டர் இலவசம்!!…. ஹீரோ நிறுவனம் சூப்பர் சர்ப்ரைஸ்…..!!!!!

ஹீரோ எலக்ட்ரிக் நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிறுவனம் தொடர்ந்து தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்டில் ஹீரோஎலக்ட்ரிக் நாட்டின் நம்பர்ஒன் எலக்ட்ரிக் டூவீலர் நிறுவனமாக இருந்து வந்தது. இது 10 ஆயிரத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்தது. இப்போது வாடிக்கையாளர்களை கவரும் அடிப்படையில் புது சலுகையை அந்நிறுவனம் தொடங்கி இருக்கிறது. அதாவது அதிரடியாக எலக்டிரிக்ஸ்கூட்டரானது இலவசம் என தெரிவித்து இருக்கிறது. ஆனால் அதற்கு சில […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்பு….. இளம் பெண்ணின் வித்தியாசமான சாதனை…. குவியும் பாராட்டு….!!!!

பெண்கள் ஒவ்வொரு துறையிலும் பல சாதனைகளை புரிந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் பெண்கள் செய்யும் சாதனை நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.  கேரளாவை சேர்ந்த ரெஹ்னா ஷாஜகான் என்ற 25 வயதான இளம் பெண் ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்புகளை முடித்து சர்வதேச உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதை கேட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் கொரோனா சமயத்தில் ஒரே நாளில் சுமார் 55 ஆன்லைன் படிப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

எக்ஸ்ட்ரா ஒரு அப்பளம் கேட்டது தப்பா…? திருமண வீட்டில் நடந்த அடி தடி சண்டை…!!!!!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்று உள்ளது. அப்போது உணவு பந்தியில் ஒரு அப்பளம் கூடுதலாக கேட்டதால் மணமகள் மற்றும் மணமகள் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மண்டபத்தில் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட மூன்று பேர் மீது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

எங்கே போனது மனிதநேயம்…..! “துடிதுடித்து இறந்த பறவை குஞ்சுகள்”…. வைரலாகும் வீடியோ….!!!!

கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகின்றது. இதற்காக மரத்தை வெட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்போது ஒரு மரத்தை வெட்டிய போது அந்த மரத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட பறவை குஞ்சுகள் இறந்து போனது. கேரள மாநிலம், மல்லபுரத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் அங்குள்ள விகே படி என்ற இடத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. அப்பகுதியில் உள்ள புளியமரம் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வேரோடு சாய்க்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

WOW: முதல் முறையாக… பழங்குடியின மக்களுக்கு பெருமை சேர்த்த பெண்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

கேரளாவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு பல சலுகைகளை அளித்தாலும், இன்னும் அவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இதனால் இதை மாற்றியமைத்து பழங்குடியின பெண்களும் கல்வியில் முன்னேறவும், வேலை வாய்ப்புகள் பெறவும் கேரள அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசின் திட்டங்கள் பழங்குடியின பெண்களை சென்றடைவதற்கு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கண்ணூர் பகுதியை சேர்ந்த கோபிகா என்ற பழங்குடியின இளம்பெண் விமான பணிப் பெண் பயிற்சியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அமித்ஷா” உடன் ஆலோசனை…! ”திராவிடம்” ட்விட் போட்ட ஸ்டாலின்… ஓடி வந்த பினராய் விஜயன் … கேரளாவில் நாளை முக்கிய சம்பவம் …!!

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக தெலுங்கானா மாநில முதல்வர்கள் மற்றும் லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளின் லெஃப்ட்னல் கவர்னர்கள் கலந்து கொள்ளக்கூடிய 30-வது கவுன்சில் கூட்டம் கோவளத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டமே தென் மாநிலங்களில் நிலவுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கிடையே நிலவும் நீர் பிரச்சனைகள் அனைத்தையும் பேசுவதற்காக தான். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை நடைபெறக்கூடிய கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கம்யூனிச கோட்டைக்கு போன ”ஸ்டாலின்”… உடனே நேரில் வந்த ”பினராய் விஜயன்”… என்ன நடக்கிறது கேரளாவில் ?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை நடக்கும் நடைபெறும் 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை அவர் தங்கி இருக்கும் இடத்திற்கே சென்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பில் எடுத்துக் கொடுக்கக்கூடிய விஷயங்கள் நாளை முன்வைக்கப்படும் என்று தெரிகிறது. இந்தக் இந்தக் கூட்டமே தென் மாநிலங்களில் நிலவுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டாலின் – பினராய் விஜயன் திடீர் சந்திப்பு – கேரளாவில் முக்கிய ஆலோசனை …!!

நாளை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் மற்றும் லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளின் லெஃப்ட்னல் கவர்னர்கள் கலந்து கொள்ளக்கூடிய 30-வது கவுன்சில் கூட்டம் கோவளத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தற்போது கடந்த ஐந்து முப்பது மணிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக,  ஸ்டாலின் தங்கி இருக்கக்கூடிய லீலா ரிசார்ட்க்கு வந்திருக்கிறார். கடந்த ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு என்பது நடந்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

#INSVikrant : போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி…!!

கொச்சியில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரான ஐஎன்எஸ் விக்ராந் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. கேரளா மாநிலம் கொச்சியில் நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு தொடங்கியது. கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் பிரதமர் மோடி. அதனைத்தொடர்ந்து இந்தியாவின் முதல் உள்நாட்டு விமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் இந்திய கடற்படைக்கு புதிய கொடியை அறிமுகம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியா இருக்கலாம்…. கட்டிலுக்கு அழைத்த இன்ஸ்டா லேடி…. ஆளை விட்டா போதும்டா…. பிரபலங்களின் பலே சம்பவம்….!!!!

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தேவு என்ற பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனையடுத்து தன்னுடைய கணவர் வெளிநாட்டு வேலை பார்த்து வருவதாகவும், தன்னுடைய தாயோடு பாலக்காட்டில் வசித்து வருவதாகவும் அந்த நபரிடம் தேவ்வு கூறியுள்ளார். மேலும் நான் உங்களை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். என் வீட்டுக்கு வாருங்கள். ஜாலியாக இருப்போம் என்றும் அந்த தொழில் அதிபருக்கு தேர்வு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதை கண்டு மகிழ்ச்சியடைந்த அவர் காரை எடுத்துக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

துரோகம் செய்த தோழி…! குளிர்பானத்தில் மயக்கம் மருந்து…. கேரளாவில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை….!!!

கேரள மாநிலம் கண்ணூரில் வசித்து வருபவர் மலர். இதில் மலரின் உறவினர்கள் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலரை தொடர்புகொண்டு தனக்கு கேரளாவில் ஏதாவது ஒரு வேலைவாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட மலர் அப்பெண்ணை கேரளா வருமாறு அழைத்தார். அவ்வாறு கேரளா வந்தால் அவருக்கு வேலைவாங்கி தருவதாக மலர் கூறினார். இதனை உண்மை என நம்பிய அந்த பெண் சென்ற மாதம் 23ஆம் தேதி தமிழகத்திலிருந்து கேரளா மாநிலம் […]

Categories
தேசிய செய்திகள்

தனிமையில் சந்திக்கலாமா….! ஆசையாக அழைத்து ஆபாச படம் எடுத்து…. பிரபலத்தை நம்பி மோசம் போன தொழிலதிபர்…!!!!

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூரில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவ் என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். இந்நிலையில் அந்த பெண் கணவர் கோவில் துபாயில் இருப்பதாகவும் தனிமையில் சந்திக்க வீட்டிற்கு வருமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய தொழிலதிபர் பாலக்காடு அருகில் உள்ள யாக்கரை பகுதியில் உள்ள வீட்டில் இளம் பெண்ணை தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்து 5 […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 5 நாட்களுக்கு…. கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே கனமழை காரணமாக கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பட்டினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம்,எர்ணாகுளம் மற்றும் இடுக்கி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இதனால் பல்வேறு இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரூ. 4000 போனஸ்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இன்று தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஓணம் பண்டிகை கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையை முன்னிட்டு மாநில முதல்வர் பினராயி விஜயன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 4000 போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போனஸ் பெற தகுதி இல்லாத ஊழியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு அப்பளத்துக்காக…. பறந்த மேஜை, உடைந்த மண்டை, சிதறிய உறவினர்கள்…. போர்க்களமான கல்யாண மண்டபம்….!!!!

கேரளா மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு முட்டம் பகுதியில் ஒரு திருமணம் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் மணமகன் முட்டம் மற்றும் மணமகள் திருக்குன்றபுழாவை சேர்ந்தவர்கள். இந்த திருமண நிகழ்ச்சி மாப்பிள்ளையில் நெருங்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து திருமணம் முடிந்த பிறகு மண்டபத்தில் விருந்து தொடங்கியது. அப்போது பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. இதனை ஒருவர் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மண்ணில் புதைந்த வீடு…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி….. பெரும் சோக சம்பவம்…..!!!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இடுக்கி மாவட்டம் தொடுப்புழாவை அடுத்த காஞ்சார் என்ற பகுதியில் திடீரென நிலசரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவு காரணமாக சிற்றடிச்சால் என்ற இடத்தை சேர்ந்த சோமன் என்பவரது வீடு மண்ணுக்கு அடியில் புதைந்து சிதையுண்டது. இந்த நிலையில் வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்த சோமன் (53), அவரது மனைவி ஷிஜி (50), மகள் ஷிமா (25), ஷிமாவின் மகன் தேவானந்த் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படும் என்று அம்மாநில நிதி அமைச்சர் பாலகோபால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கேரளா அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நான்காயிரம் ரூபாய் ஓணம் பண்டிகை போனசாக வழங்கப்படும் என்றும் போனஸ் பெற தகுதி பெறாத அரசு ஊழியர்களுக்கு 2,750 ரூபாய் ஓண பண்டிகை சிறப்பு பரிசு தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஓய்வூதிய தகவல்களுக்கு ஓனம் சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

சமூகவலைத்தள பழக்கம்: ஏமார்ந்து போன மாணவிகள்…. மாட்டி கொண்ட 3 பேர்…. சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் ஒரு கன்னியாஸ்திரிமடம் இருக்கிறது. இங்கு உள்ள விடுதியில் கன்னியாஸ்திரிகளும், சில மாணவிகளும் தங்கி இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கன்னியாஸ்திரி மடத்திற்குள்ளேயிருந்து 3 பேர் சுவர் ஏறி வெளியே குதித்தனர். இதை பார்த்த காவல்துறையினர் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், 3 பேரும் அங்கு தங்கி படித்து வரும் 3 மாணவிகளை பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். […]

Categories

Tech |