Categories
தேசிய செய்திகள்

மருத்துவ சேவைக்காக, மூடப்பட்ட கர்நாடக-கேரள எல்லையை திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்.பி மனு

கர்நாடக கேரள எல்லையை திறந்துவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்பி சார்பில் கர்நாடக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 144 தடை அமல்படுத்தப்பட்டு இன்று 6வது நாளாக நடைமுறையில் இருக்கிறது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் எல்லை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் […]

Categories
சற்றுமுன்

குடிகாரர்களுக்கு துணை நின்ற பினராயி விஜயன்…. மருத்துவர்கள் கடும் கண்டனம் …!!

கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவுக்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்பதால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள்ளே முடங்கி கிடைக்கும் கேரள மதுபிரியர்கள் பலரும் தற்கொலை செய்யும் நிலையில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர ஆணையிட்டார். மருத்துவரின் பரிந்துரையின் படி குடிமகன்களுக்கு மதுபானம் […]

Categories
தேசிய செய்திகள்

“3 பேரும் தோப்புக்கரணம் போடுங்க”… ஐ.பி.எஸ் அதிகாரி மீது அதிருப்தியடைந்த முதல்வர்!

 கண்ணூரில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை தோப்புக்கரணம் போட வைத்த காவல் கண்காணிப்பாளரின் வீடியோ வைரலானதைப் பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தியடைந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை (21 நாள்) அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரும் மக்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் எச்சரித்தும், தண்டனை கொடுத்தும் வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
தேசிய செய்திகள்

யாருமே இல்லை… சுதந்திரமாக சாலையில் சுற்றிய அரியவகை விலங்கு… வைரலாகும் வீடியோ!

ஊரடங்கையொட்டி வெறிச்சோடி காணப்படும் கேரளா சாலையில் மலபார் புனுகுப் பூனை ஒன்று சுதந்திரமாக சுற்றித்திரியும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து, நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 27 மாநிலங்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : கொரோனா : கேரளாவில் முதல் உயிரிழப்பு …!!

கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் முதல்நபர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 69 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு இந்த உயிரிழப்பு […]

Categories
தேசிய செய்திகள்

14 நாட்கள் தனியாக இருங்க… வீட்டுக்குத் தப்பிச் சென்ற IAS அதிகாரி… மாநில அரசு எடுத்த முடிவு!

சிங்கப்பூரில் இருந்து வந்த கேரளா வந்த துணை  ஆட்சியர் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பி சென்றதால் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணிபுரிந்து வருபவர் அனுபம் மிஸ்ரா. இவர் தனது விடுமுறையின் போது சிங்கப்பூருக்கு சென்று விட்டு இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து மார்ச் 19ஆம் தேதியன்று பணிக்குத் திரும்பிய அவருக்கு  சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா அச்சம் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  அதன்படி, அவரும் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், அடுத்த சில நாட்களாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : கேரளாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா – முதல்வர் பினராயி விஜயன்

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது. சீனா தொடங்கி உலகையே சின்னாபின்னமாக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்வது மக்களை வேதனையடைய வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 46 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால்  பாதிக்கப்பட்ட எண்ணிக்கையும் 750யை நெருங்கி சென்று கொண்டு இருக்கும் நிலையில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் சொந்த ஊருக்கு சென்ற கொல்லம் சப்-கலெக்டர்!

கேரளாவின் கொல்லம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சப்-கலெக்டர் யாருக்கும் தெரியாமல் தனது சொந்த மாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளார். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்திருந்தது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. மேலும், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 126ஆக உயர்வு!

கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எப்படியாவது நாங்க ஊருக்கு போகணும்- தீயில் சிக்கி குழந்தை உட்பட 4 பேர் பலி ..!!

தேனி மாவட்டம் கேரளா எல்லையோர மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கேரளாவின் இடுக்கி பகுதியில் உள்ள ஏராளமான தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மூன்று நாட்கள் முன்பு கேரளாவில் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கிருந்து எந்த வாகனங்களும் தமிழ்நாட்டுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் லாட்டரியில் கிடைத்தது ரூ 1,00,00,000… சொந்த ஊரில் ஏழைக்கு அடித்தது அதிர்ஷ்டம்..!

கொரோனா அச்சத்தால் கேரளாவை விட்டு சொந்த ஊருக்கு சென்ற ஏழைக்கு லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்த நிலையில் திடீரென கோடீஸ்வரராக மாறியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் மிர்சார்பூரை சேர்ந்தவர் இசருல் ஷேக் (Izarul Seikh) . 30 வயதான இவர் தச்சனாக இருக்கிறார். இவருக்கு உள்ளுரில் வருமானம் மிகவும் குறைவு என்பதால் வேலைதேடி கேரளாவுக்கு சில காலத்திற்கு முன்பே சென்று இருந்தார். அங்கு அவர் கடுமையாக உழைத்தால் அவருக்கு தினமும் கூலியாக ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

நிபா, வெள்ளம், கொரோனா… 3 முறை ஒத்தி வைப்பு… இளஞ்ஜோடிக்கு எப்போது திருமணம்?

கேரளாவில் நிபா வைரஸ் மற்றும் வெள்ளத்தால் 2 முறை தள்ளிப்போன இளஞ்ஜோடிகளின் திருமணம் தற்போது 3ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் இரன்கிபலன் என்ற பகுதியை சேர்ந்தவர்  26 வயதான பிரேம் சந்திரன். அதேபகுதியை சேர்ந்தவர் 23 வயதான சந்திரா சந்தோஷ். இவர்கள் இருவருமே  குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒன்றாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இருவரது வீட்டாரும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு : கேரளாவில் 52 ஆக உயர்வு… முதல்வர் பினராயி விஜயன்!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக வேலை செய்தாலே போதும் – முதல்வர் பினராயி உத்தரவு!

கேரளாவில் அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக வேலை செய்ய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அனைவருக்கும் உணவு தானியங்கள் இலவசம் – முதல்வர் பினராயி விஜயன்!

கேரளாவில் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உலகத்தை நடுங்க வைத்து கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஆஃபர் ….”ரூ. 20,000,00,00,000 ஒதுக்கீடு”….. மாஸ் காட்டிய கேரள முதல்வர்….!!

கேரளாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அம்மாநில முதல்வர் ரூ. 20 ஆயிரம் கோடி அளவில் திட்டம் அறிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் […]

Categories
தேசிய செய்திகள்

அசத்தும் கேரளா… சப்பாத்தி, பொரித்த மீன்… கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்பெஷல் உணவு!

கேரளாவில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஸ்பெஷல் உணவு வழங்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கேரள மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில்  தனி வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மிகவும் விசே‌ஷ உணவுகளும் வழங்கப்படுகின்றது. அதன்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு காலையில் உணவாக தோசை, சாம்பார், 2 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி… யாரும் வராதீங்க… வெறிச்சோடி காணப்பட்ட சபரிமலை!

கொரோனா வைரஸ் எதிரொலியால்  விடுமுறை நாளான நேற்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.  சீனாவில் உருவாகி உலகையே கொரோனா நடுங்க வைத்து கொண்டிருக்கிறது. இந்த கொடிய கொரோனா 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதுவரை 110 பேர் […]

Categories
உலக செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் – தந்தையின் இறுதி சடங்கை காணமுடியாத மகன்.. நெஞ்சை உருக்கும் சோகம்..!!

வீடியோ கால் மூலமாக தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்த மகன், கோரோனோ அறிகுறியால் ஏற்பட்ட சோகம் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! கொரோனா  அறிகுறி இருப்பதாக கருதி  மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்ட மகன் அங்கிருந்தபடியே தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தை பார்க்க நேர்ந்த சோகம், கேரளாவில் நடந்திருக்கிறது. கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த லினோ அபீக் என்ற 30 வயது இளைஞன் கடந்த 8ம்  தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார். கட்டிலிலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா இழப்பீடு இல்லை… மத்திய அரசு திடீர் முடிவு …!!

கொரோனா வைரஸ்க்கு மத்திய அரசு அறிவித்துள்ள இழப்பீடு அறிவிப்பை திரும்ப பெற்றது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பேரிடராக அறிவித்து அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் சுற்றிக்கை என்பது அனுப்பப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ‘கொரோனா’ பேரிடராக அறிவிப்பு : மத்திய அரசு …!!

கொரோனா வைரஸ் தொற்றை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமா பரவி வரும் நிலையில் அத்திலிருந்து தற்காத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பேரிடராக அறிவித்து அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் சுற்றைக்கை என்பது அனுப்பப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கர்நாடகாவில் மால், திரையரங்குகள் ஒருவாரம் மூடல்!

கொரோனா அச்சம் காரணமாக கர்நாடகாவில் தியேட்டர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு ஒருவாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

BREAKING : டெல்லியில் ஐபிஎல் போட்டிக்கு தடை!

டெல்லியில் அதிகளவில் ரசிகர்கள் கூடினால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

கேரளா: பத்மநாபபுரம் அரண்மனை மூடல்.!!

வேகமாக பரவிவரும் கொரானா அச்சத்தால்  தக்கலை அருகே கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் அரண்மனை பழமை வாய்ந்த அரண்மனை இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து செல்கின்றனர். பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கிய புகழ் பெற்ற இந்த அரண்மனையை கொரானா அச்சத்தால்  மூட கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் கேரள அரசு இந்த  நடவடிக்கை எடுத்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா… மொத்தம் 16 ஆக உயர்வு!

கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தில் 2 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை அச்சுறுத்தும் கொரோனா… பறவைக் காய்ச்சல்… தற்போது குரங்கு காய்ச்சல்.!!

கேரளாவை அச்சுறுத்தும் கொரோனா, பறவைக் காய்ச்சலைத் தொடர்ந்து தற்போது குரங்கு காய்ச்சல் தாக்கமும் கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு காய்ச்சல் காரணமாக  வயநாட்டில் உள்ள மனந்தவாடியில் உள்ள நாரங்கக்குன்னு காலனியைச் சேர்ந்த மீனாட்சி (48) என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். குரங்கு காய்ச்சல் தொற்று காரணமாக வயநாட்டில்  பதிவான முதல் மரணம் இதுவாகும். இந்நிலையில் மேலும் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ அலுவலர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா – மத்திய அரசு உறுதி …!!

சீனாவை மிரட்டிய கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் அரசு தீவிர கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் கொரோனா விட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா தடுக்க நடவடிக்கை என்ன ? மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 

இந்தியாவில் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 13 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா – பறவைக்காய்ச்சல் எதிரொலி.. தமிழகம் வரும் வாகனங்கள்.. கிருமி நாசினி தெளிப்பு..!!

கேரளா மாநிலத்தில்  பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பதின் எதிரொலியாக, புளியரை சோதனை சாவடி வழியாக, தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில்,  கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்திற்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு  தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனவே  தமிழக மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள தென்காசி, புளியரை சோதனை சாவடியில், கால்நடை  துறை அதிகாரிகள் பறவைக்காய்ச்சலுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் – கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

கொரோனா அடுத்தடுத்து பகுதிகளில் பரவி வரும் வேளையில், கேரளாவில் மேலும்  2 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது. கேரளா மாநிலத்தில்  3 வயது குழந்தைக்கு இந்த வைரஸால் பதிப்பட்டிருப்பது பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும்  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை மேற்கொண்டதில் அக்குழந்தையின்  பெற்றோரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.  இதை கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு – பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்தாக வாய்ப்பு!

கேரளாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் 7ம் வகுப்பு வரை முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : ”கோழிக்கோட்டில் 20,000 கோழிகள் அழிப்பு” பறவைக்காய்ச்சலால் நடவடிக்கை …!!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதை அடுத்து கோழிக்கோட்டில் 20,000 கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொடியாத்தூர் , வேங்கேரி ,  சாத்தமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கோழி பண்ணைகளில் கடந்த ஒரு வாரமாக கோழிகள் தீடிரென இறந்து கொண்டே.இருந்தது இதையடுத்து உரிமையாளர்கள் கால்நடைத்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் கால்நடைதுறையின் சிறப்பு மருத்துவர்கள் கோழி பண்ணைகளுக்கு வந்து கோழிகளின் கொழுப்பு மாதிரிகளை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். ஆய்வின் முடிவில் இது பறவை காய்ச்சல் என்று […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இத்தாலி சென்று திரும்பிய 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – ஆய்வில் உறுதி!

கேரளத்தில் ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 3 வயதுக் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

உலக மகளிர் தினம் : பெண் காவலர்களுக்கு கேரள காவல்துறை அளித்த சிறப்பு பரிசு..!!

உலக மகளிர் தினத்தன்று கேரளாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். 1975 முதல் ஆண்டு தோறும் உலக மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் மகளிர் தின சிறப்பு நாளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு வழங்குவதற்கு கேரளக் காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

கண் வலி என சிகிச்சைக்கு சென்ற நபர் … அறுவை சிகிச்சையின் போது அதிர்ந்த மருத்துவர்கள்..!

கேரள மாநிலத்தில் கடுமையான கண் வலி காரணமாக மருத்துமனைக்கு சென்ற நபருக்கு புற்றுநோய் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அதிர்ந்து போயினர்.  கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் 65 வயது நபர் ஒருவர் சுமார் 3 மாதங்களாக கண் வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அவர் கண்ணில்  வலி அதிகமாக ஏற்பட்டு பெரும் துன்பம் அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் பல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண்ணில் புற்றுநோய் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்தடுத்து என 6 பேர் … 9 ஆண்டுகளில் குடும்பத்தை உலுக்கிய மர்ம மரணம் ….!!

கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் ஆறு பிள்ளைகள் 9 ஆண்டுகள் இடைவெளியில் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்  கேரள போலீசார்  தாமாகவே முன்வந்து வழக்குப் பதிந்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ரபிக் – சபீனா தம்பதிகளின் 4 பெண் பிள்ளைகளுக்கு 2 ஆண் பிள்ளைகளும் கடந்த 9 ஆண்டுகளில் திடீரென மரணமடைந்துள்ளனர். அண்மையில்  பிறந்து வெறும் 93 நாட்களே ஆன இவர்களது 6-வது  குழந்தை  இன்று திடீரென்று மரணம் அடைந்த தகவல் வெளியானதை அடுத்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரளா மாநில பாஜக தலைவர்கள் நியமனம்!

மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகத் பிரகாஷ் நட்டா, மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பாஜக தலைவர்களை நியமித்துள்ளார்.  கேரள மாநில பாஜக தலைவராக சுரேந்திரனும், மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக விஷ்ணு தத் சர்மா மற்றும் சிக்கிம் […]

Categories

Tech |