Categories
தேசிய செய்திகள்

கேரளாவை புரட்டி எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 8,830 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 8,830 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமாக பரவும் கொரோனா… மருத்துவ அவசர நிலை கட்டாயம்…!!!

கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மருத்துவ அவசர நிலை அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவர்கள் கூறியுள்ளனர். கேரளாவில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கொல்லம் மாவட்டத்தில் சவரா மற்றும் ஆலப்புழாவில் குட்டநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நவம்பர் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மாநிலச் செயலாளர் கோபகுமார் மற்றும் மாநில தலைவர் ஆபிரகாம் ஆகியோர் முதல் அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை அவமதித்து ஆபாச வீடியோ… யூடியூப் சேனல் நடத்திய நபர்… அடித்து உதைத்த பெண்கள்…!!!

கேரள மாநிலத்தில் பெண்களை அவமதித்து ஆபாச வீடியோக்களை யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்த நபரை, அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற பெண்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் விஜய் பி நாயர் என்பவர் வசித்துவருகிறார். அவர் வி ட்ரிக்ஸ் சீன் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அந்த சேனலில் பெண்களை ஆபாசமாக பேசியும், கொச்சைப்படுத்தியும் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன் திரைப்பட […]

Categories
தேசிய செய்திகள்

 கள்ளக்காதல் ஜோடிக்கு இடையே தகராறு… இளம்பெண் அடித்து கொலை…!!!

பாலக்காடு அருகே கள்ளக்காதல் ஜோடிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்ணை கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் 39 வயதுடைய செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வேலை தேடிச் சென்றுள்ளார். அங்கு 52 வயதுடைய அம்சா என்பவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அம்சாவிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.இந்த நிலையில் அம்சா மற்றும் செல்வி ஆகிய இருவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் திருமணம்…!!

கேரளாவில் ஏற்கனவே நிச்சயக்கப்பட்டதால் கொரோனா பாதித்த பெண்ணுக்கு கோவிட் சிகிச்சை  மையத்தில் திருமணம் நடைபெற்றது. கொச்சி அருகே உள்ள மட்டாஞ்சேரி என்ற இடத்திலுள்ள  சிகிச்சை மையத்தில் சாயிசா என்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது கொரனோ நோயாளிகள் உற்சாகமாக ஆடி பாடினர். கொச்சியை சேர்ந்த சாயிசாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த நியாஸ் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மணப்பெண்ணிற்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மட்டஞ்சேரி சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா ஒரே நாளில் 7 ,006 பேருக்கு தொற்று…!!

கேரளாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில்தான் கண்டறியப்பட்டார். கேரளாவில் முதன் முதலாகத் கொரோனா பரவத் தொடங்கி இருந்தாலும் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கையை அம்மாநிலம் சிறப்பாக கையாண்டு வந்தது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இறப்பு விகிதமும், பரவல் விகிதமும்  மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்து 40 நாள் ஆன குழந்தை… தூக்கிச் சென்ற தந்தை…. பெயர் சுட்டும் விழாவில் கொடூரம் …!!

பிறந்து 40 நாட்கள் ஆன பிஞ்சுக் குழந்தையை தந்தையே ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் இருக்கும் உள்ள பச்சலூர் பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் தான் பெற்ற குழந்தை என்று கூட பாராமல் பிறந்து 40 நாட்கள் ஆன பெண் குழந்தையை பெயர் சூட்டு விழா நடந்த அன்று  ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஸ்வப்னாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை..!!

திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் கொச்சியில்  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கடந்த ஜூலை 5ம் தேதி வந்த சரக்கு விமானம் ஒன்றில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்க கட்டிகளுடன் கூடிய பார்சல் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. தூதரகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ரெட் அலெர்ட் ….!!

கேரளத்தில் பல பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கண்ணூர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை  எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலத்தின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கனமழை காரணமாக இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப் பகுதிகளுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா உள்ளிட்ட 5 பேர் இன்று ஆஜராக உத்தரவு..!!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் உள்ளிட்ட 5 பேர் நாளை நேரில் ஆஜராக கொச்சி என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் வழக்கில் தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் அவரது நண்பர் சந்திப் நாயர்    உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா… 3 ஆயிரத்தை எட்டிய பாதிப்பு…!!!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் இன்று மட்டும் 3,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,08,278 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் எஸ்டிபிஐ உறுப்பினர் வெட்டிப்படுகொலை – ஆர்எஸ்எஸ் வெறிச்செயல்

கேரளாவில் எஸ்டிபிஐ கட்சி உறுப்பினர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பூர்விகமாகக் கொண்ட சலாவுதீன் என்பவர் எஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது  பைக்கில் பின்தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று காரை இடித்துத் தாக்கியது.இதையடுத்து சலாவுதீன் காரை விட்டு இறங்கி பார்த்த போது, இன்னொரு பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. பின்னர் இரு குழுக்களும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவின் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?… முதல் மந்திரி…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார். கேரளாவில் இன்று மட்டும் 2,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84,759 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளதால், தற்போது வரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 337 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று 2,111 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் வகுப்பில்… “ஆபாச வீடியோக்கள்”…. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்..!!

குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் இருக்கும் போது மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஜூம் செயலி மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் Rs.20க்கு பெட்ரோல் – மகிழ்ச்சியான செய்தி …!!

கேரளாவில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பு குறித்த விவரம் தெரியவந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் உலகளவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இதனால் விலை தினமும் மாறி மாறி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில்தான் மூலிகை பெட்ரோல் என்ற ஒரு விஷயம் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

சோக சம்பவம்… “பேருந்தில் மாட்டிய சேலை”… பரிதாபமாக பறிபோன 5 மாத கர்ப்பிணி பெண்ணின் உயிர்..!!

கர்ப்பிணிப் பெண்ணொருவர் பேருந்தை பிடிக்க முயற்சிக்கையில் புடவை சிக்கியதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த திவ்யா என்ற பெண் ஆஸ்டர் மீம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். தினமும் மருத்துவமனைக்கு காலையிலேயே செல்வதை வழக்கமாக கொண்டவர் திவ்யா. எப்போதும் போல் நேற்று மருத்துவமனைக்கு செல்ல காலை 7 மணி அளவில் தயாரான திவ்யா வழக்கமாக செல்லும் பேருந்து வந்தவுடன் பேருந்தில் ஏற முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது புடவை சிக்கி பேருந்திலிருந்து […]

Categories
திருப்பூர்

ஊரடங்கால் மாநில எல்லைலேயே நடைபெற்ற திருமணங்கள்…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஊரடங்கு காரணமாக தமிழக கேரள எல்லையில் ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் சிக்கல் நீடிக்கிறது. மணமகன் கேரளாவையும், மணமகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதலால் ஏற்பட்ட சிக்கலை அடுத்து தமிழக கேரள எல்லையான சின்னார்பாண வணப்பகுதியில்  ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன. இந்த திருமணத்தில் கேரள சுகாதார துறை, வனத்துறை, மற்றும் வணிக வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். குறைந்த உறவினர்களுடன், முககவசம், […]

Categories
உலக செய்திகள்

147 நாட்கள் பிரிட்டனில்…. கேரளா மாநிலத்தவருக்கு நேர்ந்த சோகம்…!!

147 நாட்கள் வென்டிலேட்டர் உதவியுடன் பிரிட்டனில் சிகிச்சை எடுத்து வந்த கேரளாவை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் பிரிட்டனில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் குயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ராயல்பார்த்  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கொடுத்த சிகிச்சை பலன் அளிக்க தொற்றில் இருந்து விடுபட்டு வந்த ஜோசப் நுரையீரல் தொடர்பான பிரச்சனையினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தார். இதனால் எக்மோ வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் 147 […]

Categories
தேசிய செய்திகள்

“ஓணம் பண்டிகை” திருநாள்… கேரள மக்களுக்கு… குடியரசுத் தலைவர் வாழ்த்து…!!

கோலாகலமாக தொடங்கியுள்ள ஓணம் பண்டிகைக்கு குடியரசுத் தலைவர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சாதி-மத பேதம் இல்லாமல் கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம் பண்டிகை. இந்தப் பண்டிகை ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி பத்தாம் நாளான இன்று திருவோண நட்சத்திரத்தில் முடிவடைகிறது. இந்தப் பண்டிகையின் சிறப்பம்சம் ஆனது தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அத்தப் பூக்கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்தும் பல வகை […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவை உலுக்கும் கொரோனா… ஒரே நாளில் 2,476 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் இன்று மட்டும் 2,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 41,694 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே சமயத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தொடரும் “தங்க கடத்தல்”… 1.69 கிலோ தங்கம் பறிமுதல்…!!

கோழிக்கோடு விமான நிலையத்தில் ஒரு பயணியிடம்  1.69 கிலோ மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலத்தில் தற்போது அடிக்கடி தங்க கடத்தல் விவகாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கடத்தல்காரர்களை கைது செய்து தான் வருகின்றனர். அந்நிலையில் கோழிக்கோடு விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவினர் பயணிகளிடம் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, அந்த விமான நிலையத்தில் இருந்து வந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்து பார்த்தபோது அவர் மறைத்து எடுத்துவந்திருந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்தவர் வீட்டில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்…!!!

கேரளாவில் கொரோனா பாதித்தவர் வீடு மீது மர்ம நபர்கள் கல் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயலூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில், ஐந்து பேருக்கு ஒரே சமயத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.தற்போது அவர்கள் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதனால் அந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை அச்சுறுத்தும் கொரோனா… ஒரே நாளில் 2,333 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 2,333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 2,333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் கொரோனா பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50,231 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,217 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

103 வயது முதியவர்… கொரோனாவிலிருந்து மீண்டும் சாதனை… மலர் கொத்து கொடுத்து வழியனுப்பிய மருத்துவ ஊழியர்கள்…!!

103 வயதான முதியவர் கொரோனாவில் இருந்து விடுபட்டதை அடுத்து மருத்துவ ஊழியர்கள் அவருக்கு மலர் கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இந்தியாவில் கொரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதுபோல், கேரளாவிலும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு சென்ற மாதம் முதல் வேகமாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 48,000ஐ நெருங்குகிறது. மேலும் 175 பேர் உயிரிழந்து விட்டனர். அதிலும் கோரமுக கொரோனா வயதானவர்கள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினரையும் வயது […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை விரட்டும் கொரோனா… ஒரே நாளில் 1,758 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,758 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கேரளாவில் புதிதாக இன்று ஒரே நாளில் 1,758 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,898 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

கல்யாணமான 3 மாதத்தில்… 2ஆவது கணவரை பிரிந்து சென்ற பெண்… 4 ஆண்டுகளுக்கு பின் ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி..!!

2ஆவது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மாயமான பெண் சொந்த ஊருக்கு வந்து ஹோட்டல் அறையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பெண் அகிலா பரயில்.. இவர் முதல் கணவரை கடந்த 2016ல் விவாகரத்து செய்துவிட்டு, பின்னர் 2-ஆவதாக ஆம்புலன்ஸ் டிரைவரை மணந்த நிலையில் 3 மாதங்களில் அவரையும் பிரிந்தார்.. பின்னர் வீட்டில் இருந்த ரூ 30 லட்சம் பணம், 40 சவரன் நகைகள் மற்றும் காருடன் அகிலா காணாமல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“கொரோனா ஊரடங்கு” விஜய் பட வில்லனுக்கு… சைலண்டாக நடந்த திருமணம்…!!

விஜய் படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர் திருமணம் கேரளாவில் நடந்து முடிந்தது . தமிழில் கமலஹாசன் நடித்த ‘பாபநாசம்’ என்ற படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ரோஷன் பஷீர். அதைத்தொடர்ந்து விஜய் நடித்த ‘பைரவா’ படத்திலும் வில்லனாக நடித்தார். ‘குபேர ராசி’ படத்தில் நடித்துள்ளார். ‘மூன்று ரசிகர்கள்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். ‘பிளஸ் டூ’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். மோகன்லால் நடித்த ‘திருஷ்யம்’ என்ற வசூல் சாதனை நிகழ்த்திய படத்தில் வில்லனாக […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு..!!.

மூணாறு அருகே இருக்கும் பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராஜமலை – பெட்டிமுடி பகுதியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட கட்டடம் மண்ணில் புதைந்தது.இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் எனத் தெரியவந்த நிலையில், தீயணைப்பு, மீட்புத் துறையினர், காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை வீட்டுக்குள் அனுமதிக்காத மனைவி… கணவனின் பரிதாப நிலை…!!!

அமெரிக்காவிலிருந்து மனைவி, குழந்தைகளை பார்க்க வீடு திரும்பிய கணவரை கொரோனா காரணமாக வீட்டிற்குள் விடாமல் தடுத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தமிழகத்தின் மதுரையை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு கேரள மாநிலம் வெள்ளிமலை வாழ்வினை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு தற்போது குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் பாஸ்கரன் குடும்பத்தினரை கேரளாவில் விட்டுவிட்டு, அமெரிக்காவிற்கு வேலை பார்க்க சென்றுள்ளார். அதன் பின்னர் சிறிது நாட்கள் கழித்து, மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்து : சிபிஐ விசாரணை கோரி வழக்கு…!!

கேரளாவில் விமான விபத்து நடைபெற்ற கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூட கோரி கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தில் துபாய்யில் இருந்து கேரளா சென்ற  விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, ஓடுதளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள, விமான விபத்து விசாரணை முகமே  என்ற 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரள நிலச்சரிவு… 2 பேரின் உடல்கள் மீட்பு… தொடரும் மீட்புப் பணி…!!!

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் 36 அடுத்துள்ள ராஜமலை பெட்டி முடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த ஏழாம் தேதி அன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வசித்து வந்த இருபது வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போயின. வீடுகளின் மேல் பெரும் பாறைகள் உருண்டு விழுந்தன. அதுமட்டுமன்றி தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல், வீடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு… ஐஏஎஸ் அதிகாரி தொடர்பு… 5 மணி நேரம் விசாரணை…!!

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 5 மணிநேரம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கேரள முதல் அமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளராக இருந்த அவர், தங்க கடத்தல் கும்பலுக்கு தலைமைச் செயலகம் அருகிலேயே வாடகைக்கு வீடு வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. போலி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில்… இன்று மட்டும்… 1608 பேருக்கு கொரோனா… முதல்வர் அலுவலகம் அறிவிப்பு..!!

இன்று ஒரே நாளில் கேரளாவில் 1608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று மேலும் 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் ஒரே நாளில் 1,608 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 42,885 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கேரளாவில் […]

Categories
தேசிய செய்திகள்

சொத்துக்காக… தங்கை மற்றும் பெற்றோருக்கு… ஐஸ்கிரீமில் விஷம் கலந்த மகன்… தங்கை பரிதாபமாக உயிரிழப்பு…!!

சொத்துக்காக தங்கையை கொன்று விட்டு பெற்றோரையும் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் 48 வயதான பென்னி. இவரின் மனைவி பெஸ்ஸி. இந்த தம்பதியினருக்கு ஆல்பின் (22), ஆன்மேரி (16) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். ஆல்பின் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள கம்பம் பகுதியில் ஐ.டி.ஐ. படித்து வருகிறார். கொரோனா காரணமாக தற்போது காசர்கோட்டில் உள்ள குடும்பத்தினருடன் சொந்த ஊரில் தங்கியுள்ளார். அப்போது, குடும்ப சொத்து முழுவதையும் அனுபவிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் கேரள மாநிலம்…!!

கேரளாவில் செப்டம்பர் மாதத்தில் நாளொன்றுக்கு 20,000 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படக் கூடும் என சுகாதார அமைச்சர் திருமதி. ஷைலஜா கூறியுள்ளார். கேரளாவில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து கேரளாவில் அதிகரித்து வரும் பாதிப்புகள் பற்றி, கேரளா சுகாதார மந்திரி ஷைலஜா வீடியோ ஒன்றின் வழியே கூறும்பொழுது, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா  பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். நாளொன்றுக்கு 10,000 முதல் 20,000 பேர் வரை […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு… மீட்புப் பணிகள் தீவிரம்…!!

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 55 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை மீட்பு பணி வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறில் ராஜமலை பெட்டிமுடி பகுதி இருக்கிறது. இங்கு தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்காக கட்டிக் கொடுத்த கட்டடம் சென்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 80க்கும் மேலானோர் சிக்கியிருக்கலாம் என யூகிக்கபட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு புதிய நிலம் – கேரளா முதல்வர்

கேரளாவில் சிக்கியவர்களுக்கு புதிய நிலம் வழங்கப்படும் அரசு செலவில் வீடு கட்டித்தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துருக்கிறார். மூணாறு அருகே ராஜ மலைப்பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டோரும்,  40-க்கும் மேற்பட்ட வீடுகளும் மண்ணுக்குள் புகுந்தன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 55 சடலங்கள் மீட்கப்பட்டன. 18-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் சிலரின் உடல்கள் தேடும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா ஜாமீன் மனு தள்ளுபடி…!!

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையும்,  அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா, சுரேஷ்,  சரித், […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம்… உதவி செய்த ஊழியர்கள்… குவியும் பாராட்டுக்கள் …!!

ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயது கர்ப்பிணி பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அப்பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருக்கும்போது வழியிலேயே, ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அப்பெண்ணுக்கு பிரசவத்தின் போது உதவிய […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணன் வாங்கிக்கொடுத்த ஐஸ் கிரீம்….. தங்கைக்கு நேர்ந்த நிலை…. பண தேவைக்காக இப்படியா…?

பணத் தேவைக்காக குடும்பத்தையே விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளா மாநிலத்தில் இருக்கும் காசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆன்மேரி என்பவர் அவரது அண்ணனான ஆல்பின் பென்னி வாங்கிக் கொடுத்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார், அதோடு ஆல்பின் பெண்ணின் தாய் தந்தையும் அதே ஐஸ்கிரீமை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்மேரி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அதில் ஆன்மேரி சாப்பிட்ட ஐஸ்கிரீமில் விஷம் கலக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா மூணாறு நிலச்சரிவு… நேரில் சென்று ஆறுதல்… கேரள மாநில கவர்னர் மற்றும் முதல்வர்…!!

மூணாறு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மாநில முதல்வர் மற்றும் கவர்னர் ஆறுதல் தெரிவித்து வந்தனர். கேரள மாநிலம் மூணாறு ராஜமலை பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் கடந்த 7ஆம் தேதி இரவு ஏற்பட்ட இந்த பெரும் நிலச்சரிவில் சுமார் 20 வீடுகள் புதைந்து மண்ணோடு மண்ணாகின. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80-க்கும் மேலானோர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுடன் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம்… ஸ்வப்ணா ஜாமீன் மனு தள்ளுபடி… நீதிமன்றம் உத்தரவு…!!

தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா கொடுத்திருந்த ஜாமின் மனு தாக்குதலை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கேரளவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகளை  சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையும்  விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த தங்க கடத்தல் விவகார வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் ஸ்வப்னா சுரேஷை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது […]

Categories
தேசிய செய்திகள்

உணவுப்பொட்டலங்களில் இருந்த ரூ 100…. உதவிக்கரம் நீட்டிய பெண்… இன்ப அதிர்ச்சியில் மக்கள்..!!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெயரை கூறாமல் உதவிய பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. கேரளாவில் தற்போதைய சூழலில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமாக பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல இடங்களில் மண்சரிவு, வெள்ளம் போன்றவை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு மழையினால் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த மேரி என்ற பெண் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைத்துள்ளார். கணவர் வேலையை இழந்த நிலையில் மேரி 15 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு… அம்மாநில முதல் மந்திரி மற்றும் கவர்னர் நாளை நேரில் ஆய்வு…!!!

கேரளாவின் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதிகளை அம்மாநிலத்தின் முதல்-மந்திரி பிரனாய் விஜயன் மற்றும் கவர்னர் ஆரிப் முகமது நாளை நேரில் ஆய்வு செய்கின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் மேலான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அதன் பின்னர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவு…55 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்திருக்கிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் மேலான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அதன் பின்னர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கோயில்களில் தரிசிக்கலாம்: குழந்தைகள், பெரியவர்களுக்கு அனுமதி இல்லை …..!!

கேரளாவில் வரும் 17-ஆம் தேதி முதல் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கேரளாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட அனைத்துக் கோயில்களிலும் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இரு வாரங்களுக்கு முன் சபரிமலை கோயில் தவிர மற்ற கோயில்களில் வெளியே நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மலையாள மாதம் ஒன்றாம் தேதியான வரும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள மூணாறு நிலச்சரிவு… 52 சடலங்கள் மீட்பு… 16 பேரை தேடும் பணி தீவிரம்…!!

கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த வந்த குடியிருப்பு பகுதியில் கடந்த 7-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இதில், குடியிருப்பு பகுதியில் அமைந்திருந்த 30 வீடுகள் மண்ணோடு புதைந்து விட்டன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் 52 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில், 6வது நாளாக இன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஆலப்புழா, கோட்டயத்தில் வடியாத வெள்ளம் – இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத மக்கள்

மழை குறைந்தும் வெள்ளம் வடியாததால் கேரளாவின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை நேற்றுமுதல் குறையத் துவங்கியது. இதனால் பல பகுதிகளில் தேங்கி காணப்பட்ட மழை வெள்ளம் வடியும் நிலை ஏற்பட்டது. பல பகுதிகளில் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருந்தாலும் கோட்டயம், ஆலப்புழா மாவட்டத்தில் மாவட்டங்களின் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி காணப்படுகிறது. வீடுகளை சூழ்ந்தும், தெருக்களில் தண்ணீர் நிறைந்தும், காணப்படுவதால் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு… மீட்பு பணி தீவிரம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு  நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை தற்போது வரை 51 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில்  உள்ள மூணாறு அருகே அமைந்துள்ள ராஜமாலை பகுதியில் இருக்கும்  கண்ணன் தேயிலை தோட்டத்தில் கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சமயத்தில் கைகொடுத்த பிரதமர் மோடி …கேரள முதல்வர் நன்றி…!!

கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சரியான நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினரை அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் அணைகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக […]

Categories

Tech |