Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு மத்தியில் உள்ளாட்சி தேர்தல்… கேரளா அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது, இருந்தாலும் டெல்லி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கேரள மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அவ்வாறு கடந்த மாதம் மூன்று கட்டங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் 7 ஆயிரம்… கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை… மக்கள் அச்சம்…!!!

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,920 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,66,567 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,613 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசுப் பேருந்தில் மிக பெரிய கட்டண சலுகை… இனி கவலை வேண்டாம்… கேரள அரசு அதிரடி…!!!

கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 25 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கேரள அரசு போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, ” கேரளாவில் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், மாநிலம் முழுவதிலும் அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய வகையில் சூப்பர் பாஸ்ட் பேருந்துகளில் 25 சதவீத […]

Categories
தேசிய செய்திகள்

65 வயசு ஆகிவிட்டதா…..? பரோலில் போனவங்க சிறைக்கு வராதீங்க… மாநில அரசு அதிரடி….!!

சிறையிலிருந்து பரோலில் வெளியே சென்ற 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் வீட்டிலேயே இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது கொரோனாவின் தாக்கம் கேரள மாநிலத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதால் சிறையிலிருந்து பரோலில் வெளியில் சென்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிறைக்கு வர வேண்டாமென்று கூறி கூடுதலாக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பரோலில் சென்ற மற்றவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சிறைக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று மத்திய சிறைகள் உட்பட மொத்தமாக 54 சிறைச்சாலைகள் கேரளாவில் இருக்கின்றது. திருவனந்தபுரத்தில் இருந்த மத்திய சிறையில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் 6 ஆயிரம்… கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை… மக்கள் அச்சம்…!!!

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,862 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,51,131 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,559 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் கல்யாண நாளை கொண்டாடுவோம்….. கணவனை நோக்கி கிளம்பிய பெண்…. குடும்பத்துக்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

தனது முதல் திருமண நாளை கணவருடன் சேர்ந்து கொண்டாட சென்ற இளம்பெண் சாலை விபத்தில் பலியான சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கேரளாவில் வசிப்பவர்கள் சதிஷ்-அஞ்சு தேவ்(26) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. இந்நிலையில் தங்களது முதல் திருமண நாள் வந்ததால் அதை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தனர். சில மாதங்களாக தன் பெற்றோருடன் வசித்து வந்த அஞ்சு தனது திருமண நாளை கொண்டாட கணவர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார். எனவே தனது பெற்றோருடன் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் புதிய உச்சம்… ஒரே நாளில் 4 ஆயிரத்தை கடந்த பாதிப்பு… கொரோனா தாக்கம் தீவிரம்…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்று மட்டும் 4,138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனில் தொடங்கிய காதல்…. சொகுசு விடுதியில் முடிந்தது… அரங்கேறிய கொடூரம் ….!!

கேரள மாநிலம் கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஆர்யா. இவர் அங்குள்ள வாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் தொலைபேசியில் ராங் கால் மூலமாக பேசியுள்ளார். இருவரும் சாதாரணமாக பேசி பின்னர் நட்பாக மாறி, அது காதலாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் இளம்பெண்னிடம்உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று இளைஞர் சொல்லியுள்ளார். அதற்க்கு அந்தப் பெண் இந்த வார்த்தைக்காக தான் இத்தனை நாள் நான் காத்திருந்தேன் என்று சொல்லி நாம் இருவரும் தனிமையில் சந்திக்கலாம் என்று குறிப்பிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்தை நிறுத்திய கடைக்காரர்….. இளைஞன் செய்த செயல்….. அதிர வைத்த சம்பவம்….!!

திருமணத்தைத் தொடர்ந்து தடுத்தவரின் கடை இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் இருக்கும் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பின் மேத்யூ. இவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்து பெண் பார்க்க தொடங்கினர். இந்நிலையில் ஆல்பினுக்கு பெண் பார்க்க வருபவர்கள் அனைவரிடமும் அதே பகுதியில் கடை வைத்திருக்கும் ஜோஷி என்பவர் தவறாக சொல்லி தொடர்ந்து நடக்க இருந்த திருமணத்தை தடுத்து வந்தார். இதுபற்றி ஆல்பினுக்கு ஒருநாள் தெரியவர கோபம் கொண்ட அவர் ஜோஷியிடம் […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது மகளை தேடி….. பறந்து வந்த பெண்…. கிடைத்த அதிர்ச்சி தகவல்…. உடைந்து போன தாய்….!!

வெளிநாட்டிலிருந்து மகளைப் பார்க்க வந்த தாய்க்கு அவர் இறந்துவிட்டதாக கிடைத்த தகவலால் அதிர்ந்து போனார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜீஷா என்பவர் தனது கணவருடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் மகன் பிரிட்டனில் பெற்றோருடன் வசித்து வருகிறார். நான்கு வயதான மகள் கேரளாவில் தனது தாத்தா பாட்டியுடன் இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜீஷா தனது மகளை அழைத்துச் செல்வதற்காக பிரிட்டனில் இருந்து கேரளாவிற்கு சென்றுள்ளார். அரசு விதிமுறைப்படி […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்தை காவு வாங்கிய மது…. பறி போன மூன்று உயிர்… கேரளாவில் சோகம்….!!!

மதுப்பழக்கம் கொண்டவரால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் குண்டற பகுதியில் வசிப்பவர்கள் சிஜூ-ராகி தம்பதியினர். சிஜு தனியார் பேருந்து ஒன்றில் நடத்துநராக வேலை பார்த்து வந்தார். இத்தம்பதியினருக்கு 3 வயதில் ஆதி என்ற மகன் இருந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிஜூ, தினமும் போதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம்போல் குடிபோதையில் வந்த சிஜூ தன் மனைவியை தாக்கியதால், […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் Help பண்ணுங்க…. தமிழகத்தை நம்பும் கேரளா… முதல்வருக்கு கடிதம் …!!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் கேரள மக்களுக்கு ஏதுவாக வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு காய்கறி கொள்முதல் செய்வதற்க்காக 3 ஏஜென்சிகளுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நேரடியாக காய்கறி கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… நாளை முதல் சொல்லிட்டாங்க… முக்கிய அறிவிப்பு …!!

கேரள மாநிலத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இம்மாதம் 15ம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாக 28ஆம் தேதி தொடங்குவதாகவும்,  பத்தினம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யத் தொடங்கும் என கூறியுள்ளது. கடந்த ஆண்டாக இருந்தாலும்,  சரி அதற்கு முந்தைய ஆண்டாக இருந்தாலும் சரி கேரளா கனமழையால் படாத பாடுபட்டது. ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கின. கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

எகிறும் விலைவாசி…. நடுங்கும் கேரளா… கலக்கும் எடப்பாடி… உதவி கேட்ட பினராயி …!!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேளாண் உற்பத்தி விளைப்பொருள்களை நேரடியாக விற்பனை செய்து உதவிட வேண்டுமென தமிழ்நாடு, மகாராஷ்டிரா அரசுகளிடம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கைவிடுத்துள்ளார். தமிழ்நாடு, மகாராஷ்டிரா விவசாயிகளிடமிருந்தும் வேளாண் விளை பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் கேரளாவைச் சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து விலையை அதிகரித்துவருகின்றன. இதனால் கேரள மக்கள் பெருமளவில் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனையடுத்து, அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, தமிழ்நாட்டு அரசு நிறுவனங்களிடமிருந்து நேரடி கொள்முதல் செய்ய கேரள அரசு முடிவெடுத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா கிட்ட சொல்லாத… காதலனுடன் ஓடிய தாய்…. மகளையும் சீண்டிய கொடூரம் …!!

மகளிடம் தவறாக நடந்த இளைஞருடன் தாய் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்செரி பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் 28 வயது மதிக்கத்தக்க திருமணம் முடிந்த பெண்ணுடன் பழகி வந்தார். இதனையடுத்து  அந்தப் பெண்ணின் மகளிடம் சுபாஷ் தவறாக நடந்துள்ளார். இதனால் சிறுமி தாயிடம் இளைஞர் பற்றி தெரிவிக்க  அந்த பெண் தந்தையிடம் இதை சொல்ல வேண்டாம் நீ சொன்னால் நான் அவருடன் எங்காவது சென்று விடுவேன் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் வேகமெடுக்கும் கொரோனா…!!

கேரளாவில் இன்று மேலும் 8,511 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,282 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 8,511 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 77 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 95 ஆயிரத்து 657 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 2 லட்சத்து 80 […]

Categories
தேசிய செய்திகள்

சொன்னபடி கேட்க்கும்….. மீன்களுக்கு கூட ஆபத்தில்லை….. வைரலானா சைவ முதலை…!!

சைவ முதலையாக மீன்களைக் கூட துன்புறுத்தாமல் வாழ்ந்துவரும் முதலையின் புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரல் ஆகியுள்ளது ஆச்சர்யமூட்டும் சைவ முதலை  முதலை என்றாலே அது மனிதர்களை மற்ற உயிரினங்களை சாப்பிடும் மிருகம் என்று தான் பலரும் அறிந்துள்ளோம். ஆனால் கேரளாவில் ஒரு முதலை முழு சைவமாக வாழ்ந்து வருகிறது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஏரி கோயில் வளாகத்தில் இருக்கும் குகையில்தான் சைவ முதலை வாழ்ந்து வருகிறது. கோவிலின் காவலாளி  பக்தர்கள் கொடுக்கும் பிரசாதத்தை மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை முந்தி செல்லும் கேரளா… கொரோனா பாதிப்பின் உச்சம்…!!!

தமிழகத்தைவிட கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என அம்மாநில முதல்-மந்திரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். கேரளாவின் முதல் மந்திரி பினராயி விஜயன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, ” கேரளாவில் இன்று மட்டும் 5,022 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்திற்கும் மேல் எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை குருநாதா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா தங்கக்கடத்தல் விவகாரம் – சிவசங்கரை கைது செய்ய தடை…!!

கேரளா தங்க கடத்தல் வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை வரும் 23ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ சுங்கத்துறை அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் […]

Categories
கொரோனா

ஓணத்திற்கு பின் தொற்று அதிகரித்ததாக மட்டுமே கூறினேன் – ஹர்ஷ்வர்தன்…!!

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று மட்டுமே கூறியதாகவும், அம்மாநிலத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மோசமாக உள்ளது என குறிப்பிட வில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் விளக்கமளித்துள்ளார். டெல்லியிலிருந்து சமூக ஊடகங்கள் மூலம் நேற்று உரையாடிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் கொரோனா பரவல் அதிகரித்து விட்டதாகவும், ஓணம் பண்டிகையின்போது பொது முடக்கத்தில்  தளர்வுகள் அதிகமாக அளிக்கப்பட்டதால் அங்கு கொரோனா தொற்று  […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் இருந்த மருத்துவர்கள்… 385 பேரை பணி நீக்கம் செய்து…. கேரளா அதிரடி நடவடிக்கை …!!

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் 432 மருத்துவ ஊழியர்களை பணிநீக்கம் செய்து கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை மிகவும் திறம்பட கையாண்ட மாநிலமாக பலராலும் பாராட்டப்பட்ட கேரளாவில், தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கின்றது. தினமும் புதுப்புது எண்ணிக்கையில் உச்சம் பெற்று இந்தியாவிலேயே தினசரி அதிக பாதிப்பு பெறும் மாநிலங்கள் பட்டியலில் கேரளா இருந்து வருகிறது. இருந்தாலும் கொரோனாவுக்கு எதிராக வலுவான போராட்டங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை […]

Categories
Uncategorized

கேரளாவில் புதிதாக 9,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…!!

கேரளாவில் நேற்று மேலும் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து பல நாட்களாக குறைந்த தொற்று எண்ணிக்கை சமீப நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா…!!

அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நிபுணர் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பங்கு அதிகமாகும். கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம். இந்நிலையில் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் ஆனது இந்த குழுக்களை அனுப்ப உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம்: ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரை கைது செய்யக்கூடாது…!!

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளருமான திரு எம் சிவாஷங்கர் மீது வரும் 23ம் தேதி வரை கைது நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என மத்திய அமலாக்க துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக கேரள […]

Categories
தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு குற்றவாளிகளுக்கு தாவூத் இப்ராகிம் உடன் தொடர்பு…!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் டீ நிறுவனத்துடன் தொடர்பு இருக்கலாம் என கொச்சி நீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கு தொடர்பாக என்ஐஏ  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் ஜாமீன் கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

உடல்நல குறைவு…. பிரபல கவிஞர் காலமானார்…!!

கேரளாவை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் உடல்நலக் குறைவினால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளாவை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். பத்மஸ்ரீ கேந்திர சாஹித்ய அகாடமி என பல்வேறு விருதுகளைப் பெற்ற அச்சுதன் நம்பூதிரி நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, சிறுகதைகள் என பல்வேறு படைப்புகளை இயற்றியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மரியாதையா வாழ ஆசைப்படுறோம்… விடமாட்டுக்காங்க…. கண்ணீருடன் காணொளி வெளியிட்ட திருநங்கை…!!

மரியாதையுடன் வாழ ஆசைப்படும் எங்களை இந்த சமூகம் அவ்வாறு வாழ விடவில்லை என்று திருநங்கை ஒருவர் கண்ணீருடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் கேரள மாநிலத்தில் இருக்கும் கொச்சியை சேர்ந்த சஜினா என்ற திருநங்கை பிரியாணி கடை ஒன்று வைத்து நடத்தி வருகின்றார். இவரது கடையில் நாலு திருநங்கைகளுக்கும் இரண்டு பெண்களுக்கும் வேலைவாய்ப்பும் கொடுத்துள்ளார். கொரோனா சூழலிலும் இவரது கடையில் பிரியாணி வாங்குவதற்கு கூட்டம் அலைமோதி உள்ளது. ஆனால் தற்போது ஆள் நடமாட்டமின்றி காணப்படுகின்றது. அதற்கு காரணம் அக்கம்பக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்னும் 2 நாட்கள்… கொட்டித் தீர்க்கும் மழை… பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்… அவதிப்படும் மக்கள்…!!!

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவின் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். அதிலும் குறிப்பாக திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் காலில் விழுந்து… கதறி அழுத ஆதிவாசி மக்கள்… காரணம் என்ன தெரியுமா?…!!!

மண் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் கால்களில் விழுந்து ஆதிவாசி மக்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் முதலை மடை பஞ்சாயத்து, பரம்பிக்குளம் புலிகள் காப்பக வனப்பகுதியில் செம்மனம்பதி ஆதிவாசி கிராமம் இருக்கின்றது. கேரளாவில் இருந்து அந்த கிராமத்திற்கு வரவேண்டும் என்றால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சேத்துமடை வழியாக 80 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் அனைத்து வாகனங்களும் வர முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

“1 மணிநேரம் 33 வகையான உணவு” 10 வயது சிறுமியின் சாதனை…!!

10 வயது சிறுமி 33 வகையான உணவுகளை ஒரு மணி நேரத்தில் சமைத்து சாதனை படைத்துள்ளார் சமையல் ஒரு கலை. அதனை வேலையாக நினைக்காமல் ரசித்து செய்பவர்கள் தான் அதிகம். சிலர் மிகுந்த ஆர்வத்துடன் சமையலில் ஈடுபடுவர். அப்படி கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமி சமையல் மீது கொண்ட பற்றுதலால் சாதனை படைத்துள்ளார். சுமார் ஒரு மணி நேரத்தில் 33 வகையான உணவு வகைகளை ருசியாக சமைத்து சிறுமி சாதனை புரிந்துள்ளார். எர்ணாகுளத்தை சேர்ந்த விமானப்படை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மட்டும் 9,347 பேர்… கொரோனாவால் அவதிப்படும் மக்கள்…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் மட்டும் 9,347 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,202 ஆக உயர்ந்துள்ளது.ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரொனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு…!!

கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை சுங்கத் துறை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் புதிய உச்சம்… இன்று மட்டும் 11,755 பேர்… கொரோனாவால் அவதிப்படும் மக்கள்…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் மட்டும் 11,755 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,77,855 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மொத்த எண்ணிக்கை 95,918 ஆக இருக்கின்றது.இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து,தற்போதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி… வாழ அழைத்த கணவர்… மறுப்பு கூறியதால்… கணவர் வீசிய ஆசிட்…!!!

தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் மிகுந்த ஆத்திரம் அடைந்தே காதல் மனைவி மீது ஆசிட் வீசி கொலை முயற்சி செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளி என்ற பகுதியில் 38 வயதுடைய பிரிஜேஸ் என்பவர் வசித்து வருகிறார். அவர் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி அருகே இருக்கின்ற பெண்குலம் கிழக்குப் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரிஜா என்ற பெண்ணை 13 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் காதலன்… தேடி சென்ற 8ஆம் வகுப்பு மாணவி… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேஸ்புக் காதலனை பார்க்க மாணவியை அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டை அடுத்துள்ள முக்கம் என்ற பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அந்த சிறுமிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நேரலகிரியை சேர்ந்த கூலித் தொழிலாளியான 22 வயதுடைய தரணி என்பவருக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

“பேஸ்புக் காதல்” தேடி சென்ற சிறுமி….. “நான் உதவுறேன்” தெரியாதவரின் வாக்கு…. வழியில் நேர்ந்த கொடுமை…!!

பேஸ்புக் காதலனை சந்திக்க சென்ற சிறுமி வழியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கேரள மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் ஃபேஸ்புக் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த தரணி என்பவருடன் பழகி வந்துள்ளார். நட்புடன் பழகி வந்த இவர்கள் நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதனால் ஃபேஸ்புக் மற்றும் போனில் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் நேரில் சந்திக்க முடிவு எடுத்தனர். இதனிடையே சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மட்டும் 9,250 பேர்… கொரோனாவால் அவதிப்படும் மக்கள்…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் மட்டும் 9,250 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் 68,000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மொத்த எண்ணிக்கை 91,756 ஆக இருக்கின்றது. அதனைப் போலவே கேரள மாநிலத்தில் தற்போது வரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் மட்டும் 8000 […]

Categories
தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு… ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் மனு… விசாரணை ஒத்திவைப்பு…!!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் ஜாமீன் மனு விசாரணை வருகிற 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாட்டில் இருக்கின்ற அந்நாட்டு தூதரக முகவரிக்கு ஒரு பெட்டி வந்தது. அந்தப் பெட்டியில் 30 கிலோ தங்கம் இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன் பிறகு அந்தப் பெட்டியை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த கடத்தலுக்கு பின்னணியாக தூதரகத்தில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் […]

Categories
சற்றுமுன்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் மூடல்!

கோவில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் அக்டோபர்-15 ம்  தேதி வரை மூடப்படுகின்றது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்  நாடு முழுவதும் ஊரடங்கினை அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில் மக்களின் பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள்  கொண்டுவரப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கோயில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் கேரளாவில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதி… ஆனால் 250 பேர் மட்டுமே… வெளியான புதிய அறிவிப்பு…பக்தர்கள் கவலை…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற ஐப்பசி மாத பூஜைக்கு தினம்தோறும் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வழிபாட்டு தளபதியின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் மாதம் தொடங்க […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஒரே நாளில் 10,606 பேருக்கு கொரோனா தொற்று…!!

கேரளாவில் இதுவரை  இல்லாத அளவாக  ஒரே நாளில் 10 ஆயிரத்து 606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய  மாநிலமாக கேரளா மாறுவதற்கு வாய்ப்பிருப்பதாக அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு  கே.ஜே சைலஜா அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே கேரளாவில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 92 ஆயிரத்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரள மருத்துவமனையில்…! ”நோயாளி உடலை புழு அரித்தது”…. அதிர்ச்சி தகவல் …!!

கொரோனா சிகிச்சை எடுத்து வந்தவர் கழுத்தில் புழு அரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனில்குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். செப்டம்பர் 6 ஆம் தேதி மருத்துவமனையில் தொற்று பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அவர் செப்டம்பர் 26-ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு வரும் போது உடல் மெலிந்து வயிறு ஒட்டிய நிலையில் அனில்குமார் இருந்துள்ளார். அதோடு அவரது கழுத்தில் புழு அரித்த தற்கான அடையாளம் இருந்தது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த மாணவர்… ஆம்புலன்சில் எழுதிய தேர்வு… வியப்பை ஏற்படுத்திய நிகழ்வு…!!!

கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் ஆம்புலன்சில் அமர்ந்து தேர்வு எழுதிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தாலும், தேர்வுகள் அந்தந்த மையங்களில் தான் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தேர்வுக்கு செல்ல முடியாத நிலைக்கு ஆளானதால், ஆம்புலன்ஸில் அமர்ந்து தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

நம்பி விட்டு சென்ற பெற்றோர்…. சகோதரிகளிடம் அண்ணன்கள் நடந்த விதம்…. பாய்ந்த போக்ஸோ…!!

சித்தி சித்தப்பா வேலைக்கு சென்று விட சகோதரிகளுக்கு சகோதரர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசிக்கும்  தம்பதியினருக்கு 10 வயதில் ஒரு மகளும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இத்தம்பதியினர் வேலைக்கு செல்லும் போதெல்லாம் வீட்டின் அருகே வசித்து வரும் குழந்தைகளின் பெரியப்பாவின் வீட்டில் இரண்டு மகள்களையும் விட்டுச் சென்றுள்ளனர். குழந்தைகளின் பெரியப்பாவிற்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் இரட்டை சகோதரர்கள். சிறுமிகளை பெரியப்பாவின் வீட்டில் விட்டுச் சென்றதும் இரட்டை […]

Categories
கொரோனா சற்றுமுன்

கேரளாவில் காட்டுத்தீ போல் பரவும் கொரோனா…!!!

கேரளாவில் கடந்த சில தினங்களாக நாட்களாக கொரோனா தொற்று காட்டுத் தீ போன்று பரவி வருகின்றது.தமிழகத்தில்  கொரோனா  தொற்று  வேகமாக கேரளாவில் கட்டுக்குள் இருந்தது ஆனால் கடந்த சில தினங்களாக ஒருநா பாதிப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புறாவிற்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 1871 பேருக்கு புதியதாக கோரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 87 ஆயிரத்து 738 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி […]

Categories
தேசிய செய்திகள்

மாறிப்போன சடலம்…. இறுதி சடங்கை முடித்த குடும்பம்…. மருத்துவமனையின் குளறுபடி…!!

கொரோனா  தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் மாற்றி கொடுக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு கொரோனா  தொற்றினால் உயிரிழந்த ஒருவரது உடலுக்கு பதிலாக வேறு அடையாளம் தெரியாத நபரின் உடலை வெள்ளி அன்று குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் தவறுதலாக ஒப்படைத்துள்ளது. உடலை பெற்றுச் சென்ற உறவினர்கள் யார் என்பதை கூட அறியாமல் இறுதிச் சடங்குகளை செய்து முடித்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் மருத்துவமனைக்கு வேறு ஒருவரின் உடலை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து தீவிர விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் நேற்று 7,834 பேருக்கு கொரோனா…!!

கேரளாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில் நேற்று மேலும் 7 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டும் என முதலமைச்சர் திரு பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். அதன்படி புதிய உச்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 9 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை மீண்டும் 144 தடை ..!!

கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 258 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த கொரோனாா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் இன்று முதல் வரும் 31ம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 8,000 கடந்த பாதிப்பு…!!!

கேரளாவில்  ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 8,135 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 39 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2828 பேர் குணமடைந்து இன்று வீடு […]

Categories
தேசிய செய்திகள்

“சாலையில் சாகசம்” வைரலான காணொளி… தேடி சென்று ஆப்பு வைத்த அதிகாரிகள்…!!

சாலையில் பேருந்துக்கு வழிவிடாமல் இரண்டு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞருக்கு வீடு தேடி சென்று அபராதம் விதிக்கப்பட்டது கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் பகுதியில் சாலையில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்துக்கு முன்னால் சென்று கொண்டு வழிவிடாமல் இருந்துள்ளார். பேருந்தின் ஓட்டுனர் ஹார்ன் அடித்தும் இளைஞர் அதனை கண்டுகொள்ளாமல் சாகசம் செய்வதுபோல் பைக்கை ஓட்டி கொண்டிருந்தார் இதனை பேருந்தில் இருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். காணொளி  வைரலாகி  அதனை பார்த்த கண்ணூர் ஆர்டிஓ […]

Categories

Tech |