Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி: இன்று முதல் 3 நாட்களுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை 21-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரள […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பொண்ணு மட்டும் போதும்… தாலி கட்டிய கையோடு… “50 பவுன் நகையை திருப்பி கொடுத்த மணமகன்”…!!!

கேரளாவில் வரதட்சணை கொடுமை அதிகரித்து வரும் சூழலில் திருமணம் முடிந்த மணமகன் ஒருவர் மணமகள் வீட்டிற்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரளாவில் வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்து கேரள கவர்னர் ஆரிப் முகமது உண்ணாவிரதம் இருந்தார். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கேரளாவில் வரதட்சணை மறுப்புத் திருமணத்தை நடத்திக் காட்டியுள்ளார். ஆலப்புழா என்ற இடத்தை சேர்ந்த சதீஷ் […]

Categories
தேசிய செய்திகள்

ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்ல… “கழிவறையில் பிறந்த குழந்தை”… அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஏற்பட்ட அவலம்…!!!

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நிறைமாத கர்ப்பிணி கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த குண்ணமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, அவர் குன்ன மங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு மருத்துவர்கள் இல்லாததால் நர்ஸ் மட்டும் முதல் உதவி செய்துள்ளார். மருத்துவமனையில் இருந்த கழிவறைக்கு அவர் சென்றிருந்தபோது, அங்கு அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

“நல்லதுக்கு காலமில்லை!”.. புறாவுக்கு இரை வைத்தது குற்றமா..? இந்திய மாணவருக்கு நேர்ந்த நிலை..!!

மான்செஸ்டரில் புறாவுக்கு இரை வைத்த மாணவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் கேரளாவை சேர்ந்த மாணவர் ரிஷி பிரேம். இவர்  Piccadilly பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது இவரின் அருகில் புறாக்கள் வந்து அமர்ந்திருக்கிறது. எனவே தான் வைத்திருந்த உணவில் பாதியை புறாக்களுக்கு இரையாக போட்டுள்ளார். அதில் சில நடைபாதையில் விழுந்திருக்கிறது. இதைப்பார்த்த அமலாக்க அதிகாரி, குப்பைகளை நடைபாதையில் கொட்டியதாக மாணவர் ரிஷிக்கு 150 பவுண்டுகள் அபராதம் விதித்துவிட்டார். எனவே ரிஷி, இந்திய நாட்டில், […]

Categories
தேசிய செய்திகள்

10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தால்…. கொடைக்கானல் டூர்…. இது வித்தியாசமால்ல இருக்கு…!!!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் இதோடு நம்முடைய வாழ்க்கை முடிந்துவிட்டதோ? அடுத்தவர்கள் நம்மை என்ன நினைப்பர்களோ என்று எண்ணி எண்ணி மன அழுத்தத்தின் காரணமாக பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் இதன் காரணமாக தற்கொலை  செய்யும் நிலைமை கூட ஆளாகிவருகின்றனர். இதனால் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை இழக்கும் நிலை உருமாகிறது. இவ்வாறு  மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கேரளாவைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இரண்டு நாட்கள் தங்கள் குடும்பத்தினரோடு […]

Categories
தேசிய செய்திகள்

நான் கட்டுன தாலியோட மட்டும்…. என் மனைவி வந்தா போதும்…. மணமகனுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த பல பெண்கள் தங்களுடைய வீட்டு வாசலில் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று பலகை வைத்தனர். ஒரு சிலர் சமூக வலைதளங்களிலும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் சேர்ந்தவர் சதீஷ். இவர் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு நாளை முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆடி மாதப் பிறப்பையொட்டி இன்று மாலை சந்நிதானம் நடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை  முதல் 21ம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி தினமும் 5,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அவர்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிட் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நீட்டிப்பு… முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு…!!!

கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு நீட்டிப்பதாக முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் கொரோனா இன்னும் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. அதுமட்டுமில்லாமல் தற்போது ஜிகா வைரஸ் எனும் நோயும் மாநிலம் முழுவதும் மிரட்டிக் கொண்டு வருகின்றது. இதனால் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், பொது இடங்களில் முக கவசம் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவனம்… “மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை”… கதறும் தாய்…. கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே 6 வயது சிறுமி மிச்சர் சாப்பிடும்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் ஆறு வயதான நிவேதா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள காட்டன்ஹில் அரசு கீழ்நிலை தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்காக தந்தை மிச்சர் வாங்கி வந்து கொடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

covid-19 பதித்த முதல் பெண்… மீண்டும் covid-19 -ஆல் பாதிப்பு… வெளியான தகவல்…!!!

covid-19 பதித்த முதல் பெண் மீண்டும் covid-19 -ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த கேரளா மாணவிக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் இவர் குணமடைந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது இவருக்கு உடல்நிலை சீராக உள்ள காரணத்தினால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

பழனிக்கு சாமி கும்பிட வந்த பெண்ணை… கணவன் கண்முன்னே சீரழித்த கும்பல்… தீவிரமானது விசாரணை….!!!

பழனி பஸ் நிலையத்தில் கணவனுடன் சென்ற பெண்ணை கடத்தி வைத்து கற்பழித்த கும்பலை கண்ணூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தம்பதிகள் இருவரும் பழனியில் உள்ள சுவாமி முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்கு கடந்த 19ஆம் தேதி பழனிக்கு வந்துள்ளனர். இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வந்தனர். பேருந்து நிலையத்தில் அவர்கள் நடந்து சென்று இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சில நபர்கள் அந்தப் பெண்ணை கடத்திச் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்….. மிக்ஸர் சாப்பிட்ட சிறுமி திடீர் மரணம்…. அதிர்ச்சி….!!!

திருவனந்தபுரத்தில் ராகேஷ் என்கிற ஆட்டோ ஓட்டுனரின் மகளான நிவேதிதா முதலாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நிவேதிதா என்கிற அந்த ஐந்து வயது சிறுமி சாப்பிட்ட மிச்சர் தொண்டையில் சிக்கியதால் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.மிக்ஸர் சாப்பிடும் போது அதிலிருந்த கடலை மூச்சுக் குழாயில் சிக்கி மூச்சுத்திணறி சிறுமி  உயிரிழந்தார்.  தனக்கு எந்த ஒரே மகளும் உயிரிழந்துவிட்டதால் கதறித் துடிக்கின்றார் ராகேஷ். மிக்சர் சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகள், சிறுவர்களின் உணவு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்….. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் அதிகரிக்கும் தென்மேற்கு பருவமழை காரணமாக 4 மாவட்டங்களில் கனமழைக்கான ரெட்அலர்ட் […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில்… 20.4 மி.மீ. மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டும் ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடங்கிய ஓரிரு நாட்களில் கனமழை பெய்தது. அதன் பிறகு சற்று குறைந்து, தற்போது வட மாவட்டங்களில் மீண்டும் தீவிரமாக மழை பெய்து வருகின்றது. இதனால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கண்ணூர், காசர்கோடு ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ்… என்னோட பொண்டாட்டிய விட்டுடுங்க… “லாட்ஜில் சிறைவைத்து கற்பழித்த கும்பல்”… சாமி கும்பிட பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை..!!!

பழனி பஸ் நிலையத்தில் கணவனுடன் சென்ற பெண்ணை கடத்தி வைத்து கற்பழித்த கும்பலை கண்ணூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தம்பதிகள் இருவரும் பழனியில் உள்ள சுவாமி முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்கு கடந்த 19ஆம் தேதி பழனிக்கு வந்துள்ளனர். இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வந்தனர். பேருந்து நிலையத்தில் அவர்கள் நடந்து சென்று இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சில நபர்கள் அந்தப் பெண்ணை கடத்திச் […]

Categories
தேசிய செய்திகள்

JustIn: இன்றும், நாளையும் முழு ஊரடங்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோனாவால் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றும் நாளையும் தளர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 10 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி…. பெரும் அதிர்ச்சி….!!!!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடந்த 1947ம் ஆண்டு கொசுக்களால் பரவும் வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. முதலில் குரங்குகளிடம் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு பிறகு மனிதர்களிடம் கண்டறியப்பட்டது. தலைவலி, முதுகுவலி, உடல் சோர்வு மற்றும் கண் சிவத்தல் போன்றவை இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள். இந்த வைரஸ் தற்போது கேரளாவில் பரவ தொடங்கியுள்ளது. முதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கேரளாவில் 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க… இங்கு வந்துவிட்டது….OMG…..!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கர்ப்பிணிப்பெண் (24) ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் வந்த அவரை சோதித்ததில் அவருக்கு ஜிக வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்படுகின்றன. அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏடிஸ் வகை கொசுக்கள் நோய் பரவக்கூடிய இதுவும் மிக ஆபத்தான நோய் என்பது குறிப்பிடத்தக்கது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“68 வயது மூதாட்டிக்கும், 73 வயது முதியவருக்கும் டும் டும் டும்”… தடுப்பூசி போட சென்ற இடத்தில் மலர்ந்த காதல்…!!!

காதலுக்கு கண்ணில்லை என்று கூறுவதுபோல, காதலுக்கு வயதும் கிடையாது. ஒருவருக்கு மற்றொருவர் மீது ஏற்படும் அன்பு காதல் தான். அப்படி கேரளாவில் 73 வயது முதியவர் ஒருவருக்கும், 68 வயது மூதாட்டி ஒருவருக்கு மேற்பட்ட காதலானது திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த சுவாரஸ்ய காதல் கதையை பற்றி தெரிந்து கொள்வோம். கேரள மாநிலம் கொச்சியை எடுத்த காக்காநாடு என்ற பகுதியை சேர்ந்த வர்க்கீஸ் என்பவருக்கு 73 வயது ஆகின்றது. இவர் கேட்டரிங் உரிமையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்பிக்கள் லட்சத்தீவு செல்ல அனுமதி மறுப்பு… வெளியான தகவல்…!!!

கேரளா காங்கிரஸ் எம்பிக்கள் பயணத்திற்கு லட்சத்தீவு கவராத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்கர் அலி அனுமதி மறுத்துள்ளார். லட்சத்தீவு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த கேரள காங்கிரஸ் எம்பிக்களின் பயணத்திற்கு லட்சத்தீவு கவராத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்கர் அலி அனுமதி மறுத்துள்ளார். யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் நிர்வாக அதிகாரியாக பிரபுல் பட்டேல் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து நிர்வாக ரீதியாக அவர் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் மக்கள் எதிர்த்தனர். அதுமட்டுமில்லாமல் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

சனி, ஞாயிறு 2 நாட்களும் முழு ஊரடங்கு….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த சிறுமிக்கு இரவில் நேர்ந்த துயரம்.. மருத்துவமனை ஊழியரின் கேவலமான செயல்..!!

கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனை பணியாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அந்த மருத்துவமனையில் இரவு பணியாளராக 26 வயதுடைய சச்சின் என்பவர் பணியில் இருந்திருக்கிறார். அவர் சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய சிறுமி இது தொடர்பில் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் அரசு ஒடிடி – கேரளா அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இவ்வாறு கொரோனா பரவல் காலத்தில் திரைப்படங்கள் ஓடிடியின் மூலம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறிய பட்ஜெட் படங்கள் பயனடையும் வகையில் கேரள அரசு ஓட்டி தளம் ஒன்றை அறிமுகப் படுத்தும் என்று திரைபடத்துறை அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்துள்ளார். இதற்காக 150 கோடியில் திருவனந்தபுரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களுக்கு சல்யூட்…. கேரள முதல்வர் வாழ்த்து…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் மருத்துவர்கள் பணி இன்றியமையாதது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பல உயிர்களை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மருத்துவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து தேசிய மருத்துவர்கள் தினமான இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் முன்களத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள மாநில புதிய டிஜிபியாக அனில்காந்த் நியமனம்… கேரள அரசு அறிவிப்பு….!!!

கேரள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இருந்த டிஜிபி லோகநாதனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புதிய டிஜிபியாக இவர் பதவியேற்றுள்ளார். 1988 ஆம் ஆண்டைச் பேட்சை சேர்ந்த அனில் காந்த் கேரளாவில் ஏடிஜிபியாக பணிபுரிந்துள்ளார். சுரேஷ்குமார், பி சந்தியா, அனில் காந்த் ஆகியோர் பெயரை குடிமையில் பணிகள் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்களின் உடலை… வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி… பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பு…!!

கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு பினராயி விஜயன் அனுமதி வழங்கியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் நோய்த்தொற்று காரணமாக, பலரும் உயிரிழந்து வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் இறந்தவர்களை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கின்றனர். சில மாநிலங்களில் அவ்வாறு செய்வதில்லை. இதனால் கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று முறைப்படி இறுதி சடங்கு செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கேரள முதல்வர் பினராய் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை…. வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி…. முதல்வர் அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது . அவ்வாறு கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. நேரடியாக இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று உறவினர்களுக்கு தூரத்தில் இருந்தவாறே முகத்தை காட்டிய பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

காதல் கணவனால் கைவிடப்பட்டு… ஐஸ்கிரீம் விற்ற ஊருக்கே… கெத்தா போலீஸ் அதிகாரியாக வந்த இளம்பெண்….!!!!

காதல் கணவன் கைவிட்ட போதும் சாலையில் ஐஸ்கிரீம் விற்று தனது 6 மாத குழந்தையை வளர்த்து போலீஸ் அதிகாரியாக பணி அமர்ந்துள்ள ஒரு பெண்ணின் கதைதான் இது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிராம்குளத்தை பூர்வீகமாக கொண்ட ஆனிசிவா என்பவர் தனது முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பின் மீது வீட்டின் எதிர்ப்பையும் மீறி ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த காதல் திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. இரண்டு வருடம் காதல் கணவனுடன் இல்லற […]

Categories
தேசிய செய்திகள்

6 மாத குழந்தையுடன் தவிப்பு… சாதித்துக் காட்டிய பெண்… நெகழ்ச்சி சம்பவம்…!!!

பெண்கள் பலரும் பல துறைகளில் முயற்சி செய்து சாதனை படைத்து வருகின்றனர். பெண்களுக்கு சமையல் செய்ய மட்டுமல்ல, சாதித்து காட்டவும் தெரியுமென்று அனைவரும் நிரூபித்து வருகின்றன. பல துறைகளில் தற்போது பெண்கள் தான் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்கின்றனர். பல இன்னல்களையும், அவமானங்களையும் தாண்டியும் மிகவும் கஷ்டப்பட்டு சாதிக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் இங்கு நடந்துள்ளது. கேரளா மாநிலம் வர்க்கலாவை சேர்ந்த ஆனி சிவா என்ற பெண், திருமணமாகி 6 மாத கைக்குழந்தை இருந்தபோது அவரது கணவர் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் பெண்களுக்கு சிறப்பு நீதிமன்றம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

கேரளாவின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டே கேரள முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்த போலீசாருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பெண்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பஞ்சாயத்து அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பெண்கள் குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை இழிவுப்படுத்தும் கருத்துக்களை நீக்க உத்தரவு…. முதல்வர் அதிரடி….!!!!

கேரளாவில் உள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெற்று இருக்கும் பெண்களை இழிவுபடுத்தும் வாக்கியங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். பள்ளி கல்லூரிகள் அனைத்தும் பாலின சமத்துவத்துவம் மற்றும் சம உரிமையை போற்றும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதனையடுத்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். பாலின சமத்துவத்தை பாதுகாக்கும் வகையில் பெண்களுக்கு எதிரான […]

Categories
தேசிய செய்திகள்

“எங்கள் வீட்டுப் பெண்கள் விற்பனைக்கு அல்ல”… வீடுகளில் எழுதி ஒட்டி உள்ள பெண்கள்… பினராய் விஜயன் வேதனை…!!!!

கேரளாவில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த 22 வயதான ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இளங்கலை சிகிச்சை படித்த மாணவி விஸ்வமாயா என்பவர் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அது தொடர்பாகப் பல விவாதங்களும் விமர்சனங்களும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதையும் கேட்காதீர்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வரதட்சணைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். அதன்படி கேரளாவில் வரதட்சணை கொடுமைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்து வரதட்சனை கொடுக்க மாட்டோம் என பதிவிட்ட புகைப்படங்கள் வைரலானது. இதற்கு நேர்மாறாக இதையும் கேட்காதீர்கள் என்று தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை ஆண்கள் தரப்பில் ஒருவர் பதிவிட்டுள்ளார். பெண்களிடம் மட்டும் வரதட்சனை கேட்பதில்லை. அது ஆண்களிடமும் தற்போது கேட்கப்படுகிறது. ஆனால் அது கேட்கும் விதம் தான் வேறு.

Categories
தேசிய செய்திகள்

“ஒரே வாரத்தில் 3 இளம்பெண்கள் தற்கொலை”… அடுத்தடுத்து நிகழும் வரதட்சணைக் கொடுமை… கேரளாவை உலுக்கிய சம்பவங்கள்…!!

கேரளாவில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த 22 வயதான ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இளங்கலை சிகிச்சை படித்த மாணவி விஸ்வமாயா என்பவர் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அது தொடர்பாகப் பல விவாதங்களும் விமர்சனங்களும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை இழிவுப்படுத்தும் வாக்கியங்கள் அகற்றப்படும்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

கேரளாவில் உள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெற்று இருக்கும் பெண்களை இழிவுபடுத்தும் வாக்கியங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்லூரிகள் அனைத்தும் பாலின சமத்துவத்துவம் மற்றும் சம உரிமையை போற்றும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை”… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளாவில் சமூக வலைத்தளத்தில் பழகிய நண்பருடன் செல்வதற்காக பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள சாத்தனூர் என்ற பகுதியில் குப்பை தொட்டியிலிருந்து பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தை ஜனவரி மாதம் 4-ஆம் தேதி மீட்கப்பட்டது. அந்தக் குழந்தையை வீசி சென்றது யார்? அது யாருடைய குழந்தை என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த உடலை பரிசோதனைக்கு பாரிப்பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா பெண் டாக்டர் மரணம்… அடுத்தடுத்து கிடைத்த வாட்ஸ்அப், புகைப்பட ஆதாரங்கள்… கதறும் குடும்பத்தினர்…!!!

திருமணமான ஒரு வருடத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கிரண்குமார் என்பவருக்கும், பெண் மருத்துவர் விஸ்மியா நாயர் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் 100 சவரன் நகையும், ஒரு ஏக்கர் நிலமும், ஒரு டொயோட்டா கார் வழங்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

என்னோட பொண்ணு தற்கொலை பண்ணிக்கல… “அவன் தான் தீ வச்சி கொன்னுட்டா”… கதறும் தந்தை… கண் கலங்கும் சம்பவம்..!!!

வரதட்சனை கொடுமை காரணமாக திருவனந்தபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் ஆன ஒரு வருடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகின்றது. அர்ச்சனாவும் சுரேஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான மூன்று மாதத்திற்குப் பிறகு சுரேஷின் தந்தை 3 லட்சம் ரூபாயை வரதட்சணையாக பெற்றுக் கொண்டு வரும்படி அர்ச்சனாவிடம் கூறியுள்ளார். ஆனால் அர்ச்சனாவின் […]

Categories
தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமை… “பெண் டாக்டர் மரணம் தொடர்பாக கிடைத்த வாட்ஸ்அப் ஆதாரம்”… அம்பலமான கணவனின் அட்டூழியம்..!!!

திருமணமான ஒரு வருடத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கிரண்குமார் என்பவருக்கும், பெண் மருத்துவர் விஸ்மியா நாயர் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் 100 சவரன் நகையும், ஒரு ஏக்கர் நிலமும், ஒரு டொயோட்டா கார் வழங்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

WOW GREAT! தினமும் 3 லிட்டர் பெட்ரோல்-டீசல் இலவசம்…. எங்கு தெரியுமா…??

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ எட்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை […]

Categories
தேசிய செய்திகள்

மூன்றாம் அலைக்கு தயாராகும் கேரளா…. பினராயி விஜயன் டுவிட்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பேருந்துகள், மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என […]

Categories
உலக செய்திகள்

“கனடாவில் நடக்கும் திருமதி அழகிப்போட்டி!”.. முதன் முதலாக கேரளப்பெண் பங்கேற்பு..!!

திருமதி கனடா அழகி போட்டியில் முதன்முறையாக கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்  கலந்துகொள்ள இருக்கிறார். கேரளாவில் உள்ள சேர்த்தலை என்ற பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஷெரின் ஷிபின் என்பவர் வரும் ஆகஸ்ட் மாதத்தில், ரொறன்ரோவில் நடக்கவுள்ள திருமதி கனடா அழகிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இதுகுறித்து ஷெரின் ஷிபின் கூறுகையில், உலகம் முழுக்க பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு, என்னை வேதனையடையச்செய்தது. இந்த பிரச்சனைகளை வெளியில் கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பை எதிர்பார்த்தேன்.  கர்ப்பமான பெண்களும், குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை… 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய உள்ளதால் நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. இன்றும் நாளையும் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள் மகன் பொய் கூறுகிறான்…”10 ஆண்டுகள் காதலியை மறைத்து வைத்திருந்த விவகாரம்”… தொடரும் மர்மம்…!!!

10 ஆண்டுகளாக காதலியை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ரகுமானின் பெற்றோர்கள் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயலூர் கிராமத்தை சேர்ந்த ரகுமான் என்பவர் வீட்டின் அருகே இருந்த பெண் சஜிதா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சஜிதா மாயமானார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் ரகுமான் குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது தனக்கு இதை […]

Categories
தேசிய செய்திகள்

உடல் முழுவதும் சூடு… கண்ணில் மிளகாய் பொடி தூவி… வெந்நீரை ஊற்றி 22 நாட்கள் பெண் பலாத்காரம்… சைக்கோ தொழில் அதிபர் கைது…!!!

கேரளாவில் உடல் முழுவதும் சூடு வைத்து, கண்ணீல் மிளகாய் பொடி தூவி, வெந்நீரை ஊற்றி 22 நாட்கள் பெண் பலாத்காரம் செய்த சைக்கோ தொழில் அதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் பங்கு வர்த்தக பணிபுரிந்து வருகிறார். இவர் கொச்சியில் உள்ள பேஷன் டிசைனராக பணிபுரியும் ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடன் ஒரு பிளாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் அந்த பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராம்ல எதுக்கு வீடியோ போட்ட… ஆத்திரத்தில் கணவன் மனைவிக்கு தந்த தண்டனை… பரிதவிக்கும் 3 மாத குழந்தை…!!!

மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்த காரணத்தினால் கணவன் அவரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஷாநவாஸ் மற்றும் ஆதிரா என்ற ஜோடிகள் திருமணமாகாமல் வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு 3 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மனைவி ஆதிரா கணவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார். இதை பார்த்த கணவன் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் சண்டை முற்றவே மண்ணெண்ணையை […]

Categories
தேசிய செய்திகள்

10 வருடங்களாக… குடும்பத்தினருக்கு கூட தெரியாமல் காதலியை மறைத்து வைத்து இருந்த காதலன்… வெளிச்சத்திற்கு வந்த கதை….!!!

கேரள மாநிலத்தில் குடும்பத்திற்கு தெரியாமல் 10 ஆண்டுகள் பெண்ணை வீட்டில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயலூர் கிராமத்தை சேர்ந்த ரகுமான் என்பவர் வீட்டின் அருகே இருந்த பெண் சஜிதா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சஜிதா மாயமானார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் ரகுமான் குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது தனக்கு இதை பற்றி எதுவும் தெரியாது […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மீண்டும் பேருந்து சேவை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, சில தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் வருகின்ற ஜூன் 16-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

தளர்வுகளுடன் ஜூன்-14 வரை ஊரடங்கு நீட்டிப்பு – கேரளா அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் நோய்த்தொற்று குறைந்து வருவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கேரளாவில் அமலில் இருக்கும் ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில் கொரோனாவின் […]

Categories
உலக செய்திகள்

இந்தியருக்கு வெளிநாட்டில் மரண தண்டனை.. காப்பாற்றிய கேரள தொழிலதிபர்.. நெகிழ்ச்சி சம்பவம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்தியர் ஒருவரை மரண தண்டனையிலிருந்து, இந்திய தொழிலதிபர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    கேரளாவைச் சேர்ந்த பேக்ஸ் கிருஷ்ணன் என்ற நபர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்திருக்கிறார். அப்போது கடந்த 2012ஆம் வருடம் செப்டம்பர் மாதம், வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் மீது மோதிவிட்டார். இதில் சூடான் நாட்டை சேர்ந்த அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் நீதிமன்றம், கண்காணிப்பு கேமராக்களின் மூலம் […]

Categories

Tech |