Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துங்க…. கேரளாவுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்…!!!

கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருப்பது கவலையளிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் கேரளா மாநிலத்தில் பாதிப்பு அதிக அளவிலேயே உள்ளது. கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 32,801 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இங்க தான் அதிகமா இருக்கு…. உடனே கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துங்க…. மத்திய சுகாதாரத்துறை…!!!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று குறைந்தபாடில்லை. முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழையோரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நாளையும் நாளை மறுநாளும் கேரளாவில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம், இடுக்கி, பத்தினம்திட்டா, கோட்டையம், மலப்புரம் மற்றும் வயக்காடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு அமல்…. கடைகள் அடைப்பு, பேருந்துகள் ஓடாது….கேரள அரசு அறிவிப்பு….!!!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.ஓணம் உள்ளிட்ட பண்டிகைகள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதனால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று மாநில […]

Categories
தேசிய செய்திகள்

முழுஊரடங்கு….. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவு…..!!!!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரள மாநில தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில்,  இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனாபாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாட்டிலே  கேரளா முதலிடத்தில் உள்ளது. ஓணம் பண்டிகைக்கு பிறகு சமீபத்திய பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. நாட்டில் பதிவாகும் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்புகளில், சுமார் 60 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு… 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…!!!

இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை முதல் 30ஆம் தேதிவரை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கேரளா மாநிலம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது. சில மாவட்டங்களில் அதிகமாக மழை பெய்து வருகின்றது. ஜூன் மாத மத்தியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்து படியே இருந்தது. கேரளா முழுவதும் இன்று முதல் 30ம் தேதி வரை நான்கு நாட்கள் மிக பலத்த மழை […]

Categories
தேசிய செய்திகள்

“அதிகரிக்கும் பாதிப்பு” மீண்டும் ஞாயிறு முழு ஊரடங்கு…. கேரள அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தற்போதைய கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும் என்று கூறியுள்ளார். அதே சமயம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் மூன்றாவது அலை வருவதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், செப்டம்பர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அம்மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில்…. முதல்முறையாக தலித் சமூகத்தை சேர்ந்தவருக்கு… மேள கலைஞர் பணி நியமனம்…!!!

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மேளம் வாசிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. குருவாயூர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மேளம் வாசிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் தற்போது தலித் இளைஞர் ஒருவர் மேளம் வாசிக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். குருவாயூர் கோயில் உள்ளிட்ட கேரளாவில் பெரும்பாலான கோவில்களில் சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மேளம் வாசிப்பது வழக்கம். அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களே வழிவழியாக இந்த பணிக்கு நியமனம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்…. அரசு அறிவிப்பு….!!!!

கேரளாவில் ஓணம் மற்றும் முகரம் பண்டிகை முன்னிட்டு கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 18 சதவீதத்தை கலந்துள்ளதால் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் கடைகள் மற்றும் வணிக மால்கள் உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

ஞாயிறு முழு ஊரடங்கு அமல்…. கேரளா அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தற்போதைய கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும் என்று கூறியுள்ளார். அதே சமயம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் மூன்றாவது அலை வருவதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், செப்டம்பர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அம்மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கேரள மக்களுக்கு ரூ.1,000 பரிசு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!!

கேரள மக்கள் சாதி, மத, இனம் என்ற பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து ஓணம் பண்டிகையை ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதியன்று தொடங்கியது. இது வருகிற 23 ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகையொட்டி அங்குள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ1000 பரிசுத் தொகையினை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்  தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. சமூகப் […]

Categories
தேசிய செய்திகள்

கருகலைக்க பெண்களுக்கு உரிமை உண்டு…. அதிரடி உத்தரவு…!!!

கருக்கலைப்பு என்பது கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு வெளியே இருக்கும்போது உயிர்வாழக் கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர், அதனை கருப்பையிலிருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். சில சமயங்களில் தானாகவே  கருப்பையின் உள்ளே இருக்கும்போது அழிந்துவிடுகின்றது. அவ்வாறு நிகழுமாயின், அது பொதுவாகக் கருச்சிதைவு அல்லது இயல்பு கருக்கலைப்பு அல்லது தானாக நிகழும் கருக்கலைப்பு   எனப்படும். தானாக அன்றி, ஒரு நோக்கோடு செய்யப்படும் கருக்கலைப்பு தூண்டற் கருக்கலைப்பு எனப்படுகிறது. ஒரு சில சமயங்களில் கர்ப்பிணிப் பெண்ணின் அனுமதியில்லாமல் கட்டாயபடுத்தி கருக்கலைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம்…. முதல்வர் செம உத்தரவு…. அரசு அதிரடி!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறையாமல் அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை நாட்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்படி அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இணை நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை […]

Categories
தேசிய செய்திகள்

ஒருநாள் முழு ஊரடங்கு…. கேரளாவில் மீண்டும் பரபரப்பு…!!!

கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. எனவே ஓணம் பண்டிகையையொட்டி கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயத்தை கருத்தில் கொண்டு வரும் 21ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்கள் எல்லாருக்குமே…. தடுப்பூசி போட்டுட்டாங்க…. எங்கு தெரியுமா…???

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே கேரளா மாநிலம் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாகும். அங்கு தற்போது தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தோற்று உறுதியாக இருந்ததையடுத்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பு செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார். வயநாட்டில் மொத்தம் 6.51 லட்சம் பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அணைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய மாவட்டம்….. எது தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை கேரளாவின் வயநாடு பெற்றுள்ளது. மே மாதம் முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், வயநாட்டில் இதுவரை 6.16லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: முழு ஊரடங்கு, தடை – கேரள அரசு அதிரடி…!!!

கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஆயிரம் பேரில் 10 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இடத்தில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயத்தை கருத்தில் கொண்டு வரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஓணம் பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட தடை…. அரசு அதிரடி உத்தரவு…..!!!

கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. நாடு முழுவதுமான மொத்த பாதிப்பில் கேரளாவில் மட்டும் 50 சதவீத பாதிப்பு பதிவாகி வருகிறது.இந்தநிலையில், ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்படுகின்றன. இதனால்,  மக்கள் பெருமளவில் கூட வாய்ப்புள்ளது. அதுவே தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது. இதனால், கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு தலைமை செயலாளரும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான […]

Categories
மாநில செய்திகள்

சர்டிபிகேட் இருந்தா வாங்க…. இல்லையின்னா வராதீங்க…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளா, கர்நாடக மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கிருந்து நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்கள் பதிவு செய்து 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் அல்லது இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

தளர்வுகள் அனைத்தும் ரத்து…. கேரள அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஆயிரம் பேரில் 10 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இடத்தில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயத்தை கருத்தில் கொண்டு வரும் […]

Categories
தேசிய செய்திகள்

மும்மடங்கு ஊரடங்கு…. கேரள அரசு எச்சரிக்கை…!!!

கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஆயிரம் பேரில் 10 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இடத்தில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஒயின்ஷாப்பில்…. சரக்கு வாங்க இது கட்டாயம் – கேரள அரசு அதிர்ச்சி உத்தரவு…!!!!

கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரளாவில் மது பானங்கள் வாங்க டாஸ்மாக் கடைகளுக்கு வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் (அ) கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது .மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து ஒரு மாதத்திற்கு பிறகு மட்டுமே மதுக்கடைகளுக்கு வர வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: திருக்குறளை பரப்பிய முக்கிய பிரபலம் காலமானார் – சோகம்…!!!

திருவள்ளுவர் மீது கொண்ட ஈர்ப்பால் கேரளாவில் திருக்குறளை பரப்பிய சிவானந்தர் காலமானார். கேரளாவில் திருவள்ளுவர் ஞானமடம் என்ற வாழ்வியல் நெறி அமைப்பை நிறுவியவர். திருக்குறள் வாழ்வியல் நெறிகளை மக்களிடம் எடுத்துக் கூறுவதை, முழுநேர பணியாக செய்து வந்தார். திருக்குறளை மலையாள மொழி பேசும் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இவரது மறைவுக்கு தமிழார்வலர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் பள்ளிகள் திறப்பு எப்போது…? – அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் அந்தந்த மாநிலத்தில் உள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் கேரள மாநில சட்டமன்றத்தில் கல்வித் துறை அமைச்சர் பி.சிவன்குட்டி பள்ளிகள் திறப்பு குறித்து பேசுகையில், “ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் படுவதால் மாணவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் பள்ளிகள் தரப்பில் உடனடியாக முடிவெடுக்க முடியாது. உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பள்ளிகளில் பின்பற்றப்பட […]

Categories
தேசிய செய்திகள்

இனி திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு…. கேரள அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் கொடுக்கப்படும் நிதியுதவி, அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவைகளும் ரேஷன் கார்டு மூலமாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீதிகளில் தஞ்சம் அடைந்தவர்களுக்கும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று கேரள உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஜி.ஆர் அனில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வாடகை […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் விருப்பமில்லாமல்…. பாலியல் உறவில் ஈடுபட்டால்…. அதிரடி உத்தரவு…!!!

கேரளாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஒருவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருடைய மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தன்னுடைய விருப்பம் இல்லாமல் தன்னுடைய கணவர் பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த குடும்ப நீதிமன்றம் இவர்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்து வழங்கியது. ஆனால் இதை எதிர்த்து அந்த பெண்ணின் கணவர் கேரள […]

Categories
தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமை- அரசுவேலை பறிப்பு….. கேரளா முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

நாட்டில் வரதட்சணை கொடுமை என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதனால் இதுவரை பல பெண்கள் உயிரிழந்துள்ளனர். அதன்படி சமீபத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக விஸ்மயா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் காரணமாக அரசு ஊழியரான விஸ்மயாவின் கணவர் கிரன் குமாரை பணிநீக்கம் செய்ய கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கேரளா எப்போதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை களுக்கு கண்ணை மூடிக்கொண்டு இருக்காது என்று […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கடைக்குச் செல்ல நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் ….. அதிரடி உத்தரவு…!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் அலை தணிந்துள்ள நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கட்டுக்குள் வராத கொரோனா… இந்த பகுதிகளில் எல்லாம் மும்மடங்கு ஊரடங்கு அமல்…!!!

சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்டு 22 ஆகிய தினங்களில் முழு ஊரடங்கு கிடையாது என கேரளா அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா 2-ம் அலை இன்னும் கட்டுக்குள் கொண்டு வராத காரணத்தினால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் கடைகள் திறக்கப்படாத நிலையில் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஓணம் பண்டிகை வரும் 21ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த ஓணம் […]

Categories
உலக செய்திகள்

45 வருடங்களுக்குப் பிறகு… இறந்தவர் உயிருடன் வந்த அதிர்ச்சி… வெளியான புகைப்படக் காட்சி..!!

விமான விபத்தில் உயிரிழந்த நபர் ஒருவர் 45 வருடங்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1976-ஆம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் வசித்து வந்த சஜ்ஜத் டங்கல் என்பவர் தனது 25 வயதில் நடிகை ராணி சந்திரா குழுவுடன் சேர்ந்து கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அபுதாபிக்கு சென்றிருந்தார். அதன் பிறகு நடிகை ராணி சந்திரா உட்பட 95 பேர் மும்பையில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாணவியை போற்றிய கமல்ஹாசன்… எதற்கு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

கடந்த ஆண்டு கேரளாவில் நடைபெற்ற நிலச்சரிவில் கோபிகா என்ற மாணவி தனது தாய் தந்தை உள்ளிட்ட 24 உறவினர்களை இழந்து தவித்து வந்தார். அப்போது அவர் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். ஆனால் இது எதையும் மனதில் வைக்காமல், உறுதியுடன் செயல்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் ஏ பிளஸ் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இதை குறிப்பிட்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தாய் தந்தை இழந்த அந்த மாணவி […]

Categories
தேசிய செய்திகள்

“நீ எனக்கு மட்டும் தான் வேணும்”… பெண் டாக்டரை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

காதலை ஏற்க மறுத்ததால் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு காதலன் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் நாறாத்து இரண்டாம் மைல் பகுதியை சேர்ந்த மானசா என்பவர் கொச்சி கோதைமங்கலம் தனியார் பல் மருத்துவமனையில் படித்து வருகிறார். இவருக்கும் கண்ணூரை சேர்ந்த ரகில் என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தன்னை காதலிக்குமாறு மனிஷாவை தொடர்ச்சியாக அவர் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவரை காதலிக்க முடியாது […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா… ராகுல் காந்தி வருத்தம்…!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் தொற்று குறைந்துள்ள காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்துக்கொண்டே இருப்பதால், அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: […]

Categories
தேசிய செய்திகள்

3-வது அலை தொடங்கியது, மீண்டும் கடும் ஊரடங்கு…. பரபரப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் அதிவேகமாக கொரோனா பாதிப்பு பரவி வருவதால் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதோ என அச்சம் ஏற்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் சில நாட்களுக்கு…. தடுப்பூசி போடப்படாது – கேரளா அரசு அறிவிப்பு…!!!

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் மறுபக்கம் இருக்கும் நிலையில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு மட்டுமல்லாமல்  கொரோனா பாதிப்பும் தற்போது அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்  கொரோனா தடுப்பூசிகள் குறித்த தரவை […]

Categories
தேசிய செய்திகள்

“வரதட்சணை வாங்கவில்லை” திருமணம் முடிந்ததும்…. ஆண்கள் இதை செய்ய…. கேரளா அரசு உத்தரவு…!!

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த பல பெண்கள் தங்களுடைய வீட்டு வாசலில் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று பலகை வைத்தனர். ஒரு சிலர் சமூக வலைதளங்களிலும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் கேரளாவில் வரதட்சணை என்பது பெரும் பேசுபொருளாகவும், விவாதப் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் இனி வரதட்சணை வாங்கினால்….. சிறை தண்டனை, அபராதம்…. அதிரடி உத்தரவு….!!!!

கேரள மாநிலத்தில் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாவது சில நாட்களுக்கு முன் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது கேரள அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களும் திருமணத்திற்கு பின் வரதட்சணை பெறவில்லை என்று உறுதி அளித்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் அனுபாமா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள அரசின் கீழ் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் தாங்கள் திருமணம் முடிந்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் தொற்று…. கேரளாவில் மீண்டும் கடும் ஊரடங்கு – அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவிலும் ஊரடங்கினால் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 12.1 சதவீதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதனையடுத்து ஊரடங்கை கடுமையாக்க உத்தரவிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: 2 நாட்கள் முழு ஊரடங்கு…. அரசு கடும் உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்றும் நாளையும் முழு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மிகவும் புகழ் பெற்ற பிரபலம் காலமானார்…. இரங்கல்….!!!!

கேரளாவின் புகழ்பெற்ற பாகீரதி அம்மாள் தனது 107 ஆவது வயதில் காலமானார். இவர் 105 வயதில் தனது பள்ளி படிப்பை மீண்டும் துவங்கி நான்காம் நிலை தேர்வில் 70 சதவீதம் மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்தார். இவருக்கு மத்திய அரசு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கி கவுரவித்தது. பிரதமர் மோடியும் இவரை தனது மான் கீ பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பாராட்டினார். இப்படி பல பெருமைகளுக்கு உரிய இவர் இன்று காலமானார்.

Categories
தேசிய செய்திகள்

Shock: மீண்டும் 2 நாட்கள் முழு ஊரடங்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் வருகின்ற ஜூலை 24 மற்றும் 25 ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பரவல்… கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு…!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் ஜூலை 24, 25 தேதிகளில் கேரளாவில் முழு ஊரடங்கு அமலுக்குவருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:- “வரும் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் கேரளாவில் முழு ஊரடங்கு அமலுக்குவருகிறது. அப்போது கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். நோய்த்தொற்று பரவலுக்கு ஏற்ப உள்ளாட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஆட்சியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். மிகக் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: முக்கிய பிரபலம் மர்ம முறையில் மரணம்…. பெரும் சோகம்….!!!!

கேரளாவின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கியும், சமூக செயற்பாட்டாளருமான அனன்யா குமாரி மர்மமான முறையில் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை சரியாக சிகிச்சை தருவதால் உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என தொடர்ந்து போராடி வந்தார். இந்நிலையில் அவர் இன்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

புதிய தளர்வுகள் ரத்து….. முழு ஊரடங்கு தொடரும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் இல்லை என்றும், வார […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாடுகள் தளர்வு- முழு ஊரடங்கு அவசியம்…. அதிரடி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் கட்டுப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 300 ரூபாய் செலவில்…. 12 கோடியை அள்ளிட்டு போங்க…. கேரள அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

கேரளா அரசு சார்பாக ஓணம் சிறப்பு லாட்டரி பரிசு 12 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு சார்பாக பண்டிகை தினத்தன்று சிறப்பு லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஓணம் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு லாட்டரியில் முதல் பரிசாக 12 கோடியும், இரண்டாம் பரிசாக 6 பேருக்கு தலா ஒரு கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சீட்டின் விலை ரூ.300 என அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Categories
தேசிய செய்திகள்

ரூ.300 க்கு லாட்டரி வாங்குங்க…. ரூ.12 கோடி பரிசு அள்ளுங்க…. கேரளா அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் கேரளாவில் லாட்டரி சீட்டு விற்கும் நடைமுறை உள்ளது. இந்நிலையில் கேரள அரசு சார்பாக ஓணம் சிறப்பு லாட்டரி பரிசு ரூபாய் 12 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா அரசு சார்பாக பண்டிகை தினத்தன்று சிறப்பு நாட்களில் லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்படும். இதனையடுத்து ஆகஸ்ட் 12-ஆம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்க இருக்கிறது .இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு லாட்டரியின் முதல் பரிசாக 12 கோடியும், […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வரின் சூப்பர் அறிவிப்பு….. இன்று முதல் அமலாகிறது….!!!!

கேரளாவில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். பாலின சமத்துவத்தை பாதுகாக்கும் வகையில் பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை நீக்கவும், பெண்கள் குறித்த விபரீத எண்ணங்களை அடிப்படை கல்வியில் இருந்தே மாற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான வரதட்சனை கொடுமை மற்றும் பொது இடங்களில் நடக்கும் வன்முறை ஆகியவற்றை தடுக்க பிங் பாதுகாப்பு திட்டம் இன்றுமுதல் கேரளாவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தளர்வுகளை வாபஸ் பெற்று முழு ஊரடங்கு போடுங்க…. பரபரப்பு உத்தரவு….!!!!

ஜூலை 21-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரள மாநிலத்தில் ஊரடங்கில்  நாட்களுக்கு சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகள் போன்றவை இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காலணிகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ஃபேன்ஸி பல்பொருள்கள் கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று நாட்கள் தளர்வுகள் அளிக்கப்பட்டதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தளர்வுகள் அறிவிப்பதன் வாயிலாக கொரோனா மூன்றாவது அலை விரைவில் […]

Categories

Tech |