மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தற்போது 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. மூணாறு ராஜமலை பெட்டிமுடி பகுதியில் சென்ற 7-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வந்த 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனால் அந்த வீடுகளில் வசித்த 78 பேர் மண்ணுக்குள் புதையுண்ட னர். அவர்களில் 16 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் மண்ணுக்குள் புதைந்தவர்களை […]
