தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி அருகில் பூதனஅள்ளி பெரியகரடு வன ப்பகுதியில் 2 பேர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில், அதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 2 பேரின் உடல்களிலும் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. அத்துடன் அவர்களின் பாக்கெட்டுகளில் 2 செல்போன்கள், ஆதார் கார்டுகள், ஓட்டுனர் உரிமம், பான்கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகள், மலையாள மொழியில் எழுதப்பட்ட கடிதம் போன்றவை இருந்தது. மேலும் […]
