கேரளாவில் பத்து மாதங்களுக்கு பின் நாளை திரையரங்குகள் திறக்கப்படவுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் கேரளாவில் கடந்த ஐந்தாம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது . ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரையரங்குகளை திறக்க மறுப்பு தெரிவித்தனர். பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டதால் அதன் உரிமையாளர்கள் நஷ்டத்தில் இருப்பதாகவும் , அரசு கேளிக்கை வரியை ரத்து செய்து மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் […]
