யானைகள் மீது ரயில் மோதியது குறித்து விசாரிக்க சென்ற தமிழக வனத்துறையினரை கேரள அதிகாரிகள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் மதுக்கரை வனச்சரகத்தில் நேற்றிரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை கூட்டத்தின் மீது கேரளாவில் இருந்து மங்களூர்- சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் பயங்கரமாக மோதியது. இதில் 3 யானைகள் சிறிது தூரம் ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை […]
