திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக சர்க்கரை நோய் பரிசோதனை திட்டத்தினை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதற்கு முன்பாக வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட கொட்டையூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டு இருக்கும் புது துணைசுகாதார நிலையத்தினை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தபோது ”கேரளாவில் பரவி […]
