கூடுதல் மணி நேரம் வேலை செய்வதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக கேட்கீப்பர்கள் ரெயில்வே மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் பணியாற்றும் ரயில்வே கேட் கீப்பர்கள் 25 பேர் திண்டுக்கல் ரயில்வே மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் கூடுதல் நேரம் வேலை வாங்குவதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதனால் மருத்துவ பரிசோதனை செய்யும்படி கூறியுள்ளனர். மேலும் மருத்துவ விடுப்பு அளிப்பதற்கு சான்று அளிக்கும் படியும் தெரிவித்துள்ளனர். ஆனால் ரயில்வே மருத்துவமனை மருத்துவர் […]
