விவசாயிகளின் நலனுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து, வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணையின் தண்ணீரை தமிழக அரசு கோடை சாகுபடிக்காக திறந்துவிட்டது. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் கோடை சாகுபடிக்கு தண்ணீர் வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியும், அதில் 39.85 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது என்றும், அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 172 […]
