ரஷ்ய நாட்டுடன் சேர்க்கப்பட்ட கெர்சன் நகரின் பெரிய பகுதிகளை உக்ரைன் படையினர் மீண்டும் மீட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உச்சகட்டமாக, ரஷ்யபடையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் நான்கு முக்கிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொண்டனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் ரஷ்ய அதிபர் வெளியிட்டார். மேலும், ரஷ்ய படையினருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில், அணு ஆயுதங்களை தயக்கமின்றி பயன்படுத்துவோம் […]
