அழுகிய நிலையில் இருந்த 80 கிலோ மீன்களை அதிகாரிகள் அழித்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு தரமற்ற மீன்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்படி மீன்வளத்துறை, உணவு பாதுகாப்பு துறை, மாநகராட்சி நிர்வாகம் அடங்கிய குழுவினர் நேற்று மீன் மார்க்கெட்டில் திடீரென சோதனை நடத்தினர். இதனை அடுத்து அழுகிய நிலையில் இருந்த 80 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அங்கேயே அழித்தனர். […]
