கூவாகம் கிராமத்தில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் புகழ்வாய்ந்த கூத்தாண்டவர் கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இத்திருவிழாவில் தமிழகத்தில் உள்ள திருநங்கைகள் மட்டுமன்றி மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பெரும்பாலான திருநங்கைகள் வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது நேற்று தொடங்கி உள்ளது. இதை முன்னிட்டு அங்குள்ள மக்கள் கூழை வீட்டில் […]
