ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் அரசு செயலாளர், ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது பெருநட்டாந்தோப்பு மேல தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி தேவேந்திரன் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதை பார்த்த அமைச்சர், […]
