நாய் ஆடுகளை கடித்ததால் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நாய் வளர்த்து வந்தார். இவரது நாய் அக்கம்பக்கத்தில் வளர்த்து வந்த ஆடுகளை கடித்ததால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியில் வசிக்கும் சிலர் கடந்த 13-ஆம் தேதி மாரியப்பனின் வீட்டிற்குள் நுழைந்து தகறாரில் ஈடுபட்டுள்ளனர். […]
