திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே ,கூலித் தொழிலாளி ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி பகுதிக்கு அடுத்துள்ள சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 39 வயதான முத்து , தன் மனைவி நீலாவுடன்(வயது 30) வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வயல்வெளி பகுதியில் இருந்த, பாம்பு ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது. […]
