நாம் நோயின்றி வாழ வேண்டும் என்றால் உணவை இப்படி தான் சாப்பிட வேண்டும் என்று சித்தர்கள் கூறுகின்றனர். நம் தாத்தா, பாட்டி காலத்தில் சாப்பிட்டதை விட அதிக காய்கறிகள், பழங்களை நாம் சாப்பிடுகிறோம். இருப்பினும் நம் உடல் அவர்களைக் காட்டிலும் பல மடங்கு வலிமையற்றே உள்ளது. இதற்கு உணவில் சேர்க்கப்படும் நச்சு மட்டும் காரணம் இல்லை. நாம் சாப்பிடும் விதமும் ஒரு காரணமே. முந்தைய நாள் சமைத்த உணவு அமுதாகினும் அவற்றை மறு நாள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். […]
