கூட்டுறவு வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் கோவை மாவட்ட கூட்டுறவு தானியங்கி வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இந்த இயந்திரத்தை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் புதிதாக கூட்டுறவு தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் அனைத்து வங்கியின் […]
