மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அருகில் தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை கடந்த 1987-ம் வருடம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் விரிவாக்கப் பணியில் ஏற்பட்ட பிரச்சனை, தொடர் பழுது காரணமாக ஆலை செயல்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2016-ஆம் வருடம் முதல் கரும்பு அரவை நிறுத்தப்பட்டன. இந்த ஆலையை […]
