பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ஆளூர் வீரநாராயணசேரி பகுதியில் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் அம்பிகா என்பவர் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள கருப்பு கோடு ஐந்து என்ற குழுவின் பெயரில் பண மோசடி செய்ததாகவும், புதிய உறுப்பினர் சேர்க்கையில் பாகுபாடு காட்டுவதாகவும், நகைக்கடன் மற்றும் உரம் வழங்குவதில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். […]
