தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் பிரதான அங்கம் வகித்து தேர்தலுக்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் திமுக தலைமையுடன் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வார்டு பகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் வெறும் 6 வார்டுகள் […]
