திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கிடையாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை மயிலையில் திமுகவின் கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, 234 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நான் திமுக தலைவரிடம் சொல்லி இருக்கிறேன். குறிப்பாக சென்னை தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக […]
