சீனாவில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான கருத்தை கூறிய விளையாட்டு வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அரசாங்கம் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்நாட்டு மக்கள் ஷாங்காய், பீஜிங் போன்ற நகரங்களில் தெருக்களில் இறங்கி தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் போராட்டம் நடத்துபவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும் ஏற்படுகிறது. இதனைத்தொடர்ந்து சீன அரசாங்கம் சில கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தியது. […]
