கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஅள்ளி பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 1,000-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.சி, கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியல் காட்சி தொடர்பு ஊடகவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவிகள் பயின்று வருகின்றனர். தர்மபுரி, […]
