2-ஆம் போக நெல் சாகுபடிக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 152 அடி உயரமுள்ள முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் […]
