தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கோவை முதலிடத்தில் உள்ளது. அதனால் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் பிறப்பித்துள்ளார். அதன்படி அனைத்து மால்கள், பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்க அனுமதி. பொள்ளாச்சி மாட்டு சந்தை இயங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை விமான மற்றும் ரயிலில் வரும் பயணிகள் […]
