கூடுதல் இயற்கை எரிவாயுவை மத்திய அரசு விநியோகிக்காததால் அதனுடைய விலையானது தொடா்ந்து அதிகரித்து வருவதாக நகரப் பகுதிகளிலுள்ள எரிவாயு விநியோக நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளது. உள்நாட்டிலுள்ள எண்ணெய் வயல்களில் இருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவை நகரப் பகுதிகளிலுள்ள விநியோக நிறுவனங்களுக்கு 6 மாதம் இடைவெளியில் வழங்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சென்ற 2014-ஆம் வருடம் முடிவெடுத்தது. அந்த வகையில் ஏப்ரல், அக்டோபரில் இயற்கை எரிவாயுவானது தேவைக்கேற்ப நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உள்நாட்டில் கிடைக்ககூடிய இயற்கை எரிவாயு […]
