தி.மு.க ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தேனி அல்லிநகரத்தில் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “இன்னும் ஓராண்டில் மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பின், நகராட்சி, பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும். கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் 5,000 பணியிடங்கள் 6 மாதங்களில் எவ்வித இடையூறும் இன்றி தகுதியானவர்களை […]
