சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரண்டு பேர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கூச்சல் மற்றும் குழப்பம் நிலவியது. தமிழகத்துக்கு விரைவில் நகராட்சி,மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை […]
