நான் பாஜகவில் இணையவில்லை என்று திமுகவில் இருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவில் மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று தமிழகம் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியது. இதைத்தொடர்ந்து தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில் பாஜக […]
