மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் குவைத் நாட்டின் பிரதமரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்கு வருகை தந்த குவைத் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் அகமது நாசர் அல்முகமது அல்சபாவின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் காலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் குவைத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உதவி வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் ரசாக் அல்கலீபா விமான நிலையத்தில் வைத்து வரவேற்பு அளித்துள்ளார். மேலும் இந்திய அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் சிபி […]
