இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் தற்போது சூழ்நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை ராஜினாமா செய்த நிலையிலும், அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகாததனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்து வருகின்றது. காவல்துறையினர் வன்முறையை தடுக்க வேண்டும் என்பதற்காக முழு […]
