ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு உயா்த்தப்போகிறதா என பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பின் பாமக தலைவர் ஜி.கே.மணி அரசின் கவனத்தை ஈர்த்து பேசியுள்ளார். அப்போது அவர் ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு உயர்த்த போவதாக செய்திகள் வருகிறது. பொதுமக்கள் கொரோனா காரணமாக பொருளாதாரரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டியை உயர்த்தினால் அத்தியாவசிய பொருட்களின் […]
