குழித்துறை ரெயில் நிலையத்தில் மது அருந்தி விட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற கட்டிடதொழிலாளி பலி. கன்னியாகுமரி மாவட்டத்தில் அருவிக்கரை அருகே உள்ள மாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சுஜர்சிங் (வயது 45). இவருக்கு பிந்து என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் கேரள மாநிலம் திருவல்லாவில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். வாரத்தின் இறுதி நாட்களில் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த சுஜர்சிங் கடந்த 26ஆம் தேதி தனது நண்பர்களுடன் […]
