இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள ராட்சததண்ணீர் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக தெருக்களில் வெள்ளம் பாய்ந்தோடியது. இஸ்லிங்டன் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ராட்சத தண்ணீர் குழாயில் நேற்று காலை திடீரென வெடிப்பு ஏற்பட்டதால், அங்கு உள்ள சாலைகளில் கிட்டத்தட்ட 4 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற அவசர சேவை உதவி படையினர் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வெள்ளத்தில் […]
