பாட்டி, பேரனை பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்ற நிலையில் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்சங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரின் மனைவி மேரி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் மேரி தனது குழந்தை மற்றும் மனநலம் பாதித்த தனது தாயாருடன் ஈரோட்டிற்கு துணி எடுக்க சென்றுள்ளார். அவர்கள் திருச்செங்கோட்டில் இருந்து பேருந்தில் புறப்பட்டார்கள். கடைசி சீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது பேரனுடன் அமர்ந்திருந்தார். திடீரென மனநல பாதிக்கப்பட்ட பெண் […]
