குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது அனைவரின் கடமையாகும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சியானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றததையடுத்து மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின் அவர் பேசியதாவது, வளர்ந்துவரும் நாடுகளில் அதிகமாக குழந்தை தொழிலாளர் முறை இருக்கின்றது. ஆகையால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் மாதம் 12-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. […]
