தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்திருப்பதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றவும் மாடுகள் ஆடுகள் மேய்க்கவும் விவசாயத்துக்காகவும் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறை அதிகரித்து பல்வேறு வழக்குகள் பதிவாகி வருவதாகவும் இந்த பகுதியில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையம் அமைத்து […]
