தீப்பெட்டி வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமி உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன்-பால்மணி. கூலி தொழிலாளர்கனான இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் தங்களின் குழந்தைகளை பக்கத்து வீட்டில் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் செல்வது வழக்கம். இதேபோல சம்பவத்தன்றும் முருகன் தம்பதி வேலைக்குச் சென்றிருந்துள்ளனர். அப்போது கடைசி மகள் லட்சுமி(5) தீப்பெட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியின் உடலில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து எரிச்சல் காரணமாக குழந்தை […]
