கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதேபட்டியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 8 மாத ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 12-ஆம் தேதி வெங்கடேசனின் மனைவி தனது குழந்தையுடன் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்று சிகிச்சை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்லும் முன் தனது குழந்தையை முன்புறம் இருந்த இருக்கையில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளார். […]
