தீக்காயமடைந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் சத்திரத்தில் வேல்முருகன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 1/2 வயதுடைய ஷபிஷ்னி என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளது. கடந்த 2-ஆம் தேதி குழந்தையின் தாய் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது பொருட்களை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென அடுப்பில் இருந்த பாத்திரத்தை எடுத்தாள். இதனால் எதிர்பாராதவிதமாக குழந்தை மீது தீப்பிடித்து எரிந்தது. […]
