மனைவி மீது வந்த சந்தேகத்தால் பச்சிளம் குழந்தையை அவரது கணவர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காக்கங்குடி பகுதியில் ராஜி என்கின்ற ஏழுமலை வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு சிவரஞ்சனி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜி வீட்டிற்கு மது அருந்தி விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததால் […]
