வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சிட்லப்பாக்கம் திருமலை நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 வயதில் வர்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வர்ஷா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருக்கும் போது ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனை பார்த்த அங்குள்ள குழந்தைகள் வர்ஷாவின் […]
