பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கென குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 27 .11. 2021 அன்று பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவது துரிதப்படுத்துமாறும், வழக்குகளில் […]
