உலக அளவில் கொரோனா மற்றும் குரங்கம்மை வைரஸ் போன்றவைகள் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று புதுவை மற்றும் காரைக்காலிலும் கடந்த 10 நாட்களில் சளி, […]
