இங்கிலாந்து நாட்டில் குழந்தைகள் நல ஆணையர் தெரிவித்த புகாரியில் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 650 சிறுவர்களின் ஆடைகளை நீக்கி காவல் துறையினர் சோதித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் ரேச்சல் டி சோசாஎன்ற குழந்தைகள் நல ஆணையர், லண்டன் நகர காவல் துறையினரிடம் இருந்து கிடைத்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த வருடம் கருப்பினத்தை சேர்ந்த 15 வயதுடைய ஒரு சிறுமியிடம் கஞ்சா இருந்ததாக கூறி […]
