உக்ரைன் அரசு, ரஷ்யா தங்கள் நாட்டை சேர்ந்த 2 ஆயிரம் குழந்தைகளை கடத்தி சென்றதாக அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இரு தரப்பிலும் பல முறை பேச்சுவார்த்தைகள் நடந்த போதும் எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த போரில் உக்ரைன் நாட்டின் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் ரஷ்யப் படைகளால் கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் […]
